பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1082 திருக்குறட் குமரேச வெண்பா சக்து வந்தான் ஆதலால் உயர்ந்த கொடை வள்ளல் என உலகம் இவனை வியந்து புகழ்ந்து யாண்டும் விழைந்து வந்தது. தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன் பன்மணிக் குவையொடும் விரை இக் கொண்மெனச் சுரத்திடை நல்கி யோனே விடர்ச்சிமை ஓங்கிருங் கொல்லிப் பொருநன் - ஒம்பா ஈகை விறல்வெய் யோனே. (புறம், 152) இவனுடைய ஈகை நிலையையும் வாகை வகைகளையும் இத குல் உண்ர்ந்து கொள்கிருேம். அரிய உபகாரங்களைச் செய்து வந்த இவர் பெரிய கீர்த்தியாளராய்ப் பெருகியுள்ளனர். உயர்ந்த புகழ் ஒன்றே பொன்ருது கிற்கும்; அதனைச் செய்தவரே சிறந்து திகழ்வர் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கிற்கின்ருர். கில்லா உலகில் நிலையாய் நிலைத்துளது நல்ல புகழ்ஒன்றே யாம். சிறந்த புகழ் புரிந்து சிரஞ்சீவியாகுக. 234. வானுலகும் போற்றியதேன் வண் புறவை வானவர்தம் கோனேயும்போற் ருமல் குமரேசா-மான நிலவரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப் போற்ருது புத்தேள் உலகு. (4) இ-ள் குமரேசா! அரிய புகழ் புரிக்க ஒரு புருவை என் பெரிய வானுலகமும் உவந்து போற்றியது? எனின், கிலவரை நீள் புகழ் ஆற்றின் புத்தேள் உலகு புலவரைப் போற்ருது என்க. - இங்கிலவுலகில் நெடிய புகழை ஒருவன் ஆக்கிவரின் பொன் உலகம் தன்பாலுள்ள தேவ ைஅன்பாய்ப் போற்ருது. வசை=எல்லை. புலவர்=தேவர். தெளிக்க அறிவுடையவர் என்பது இப் பேரால் விளங்கி நின்றது. ஆற்றின் என்றது அவ்வாறு ஆற்றுவார் மிகவும் அரியர் என்பது தெரிய நின்றது. மனிதன் புகழைப் போற்றிக் கொள்ள வேண்டும் என்று போதித்து வருகிருர் ஆதலால் அதன் மகிமையை இவ்வாறு போற்றியுள்ளார். அரிய இசையில் இனிய நசை தோன்றஇதமாய் இசைத்து வருவது தனித்து உனா வுரியது. -