பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. புக ழ் 1095 மனிதரின் அரியது ஆகும் தோன்றுதல்; தோன்றிலுைம் இனியவை நுகர எய்தும் செல்வமும் அன்னதேயாம். (1) உயர்குடி நளிையுள் தோன்றல் ஊனமில் யாக்கை ஆதல் மயர்வறு கல்வி கேள்வித் தன்மையால் வல்லர்.ஆதல் பெரிதுணர்வு அறிவே யாதல் பேரறம் கோட்ல் என்ருங்கு அரிதிவை பெறுதல் ஏடா பெற்றவர் மக்கள் என்பார். (2) (வளையாபதி) மனிதப்பிறவியில் தோன்றுதல் அரிது; அவ்வாறு கோன் அபினவர் அத்தோற்றத்துக்கு ஏற்ற புகழ் புண்ணியங்களைப் போற்றிக்கொள்ளவேண்டும். அங்ஙனம் பெற்றவரே மக்கள்: பெருதவர் மாக்களே என இவை குறித்துள்ளன. குறிப்புகள் கூர்ந்து கோக்கி ஒர்ந்து சிங்கித்து உணரத் தக்கன, புகழ் உயிருக்கு உயர்ந்த ஊதியம் ஆதலால் அதனே அடை ங்,கவனே பிறந்த பயனைப் பெற்றவன் ஆகிருன். அடையாதவன் கடையாயிழிந்து கழிந்து ஒழிந்து போகிருன். i. பூத லத்தில் மானிடராய்ப் பிறப்பது அரிது எனப் புகல்வார் பிறந்தோர் தாமும் ஆகிமறை நாவின்முறை அருள் கீர்க்கி யாத்தலங்கள் அன்பாய்ச் சென்று கிேவழு வாதவகை வழக்குாைத்து கல்லோரை நேசம் கொண்டு காகவழி பேரில்லார் கழுதைஎனப் பாரிலுள்ளோர் கருது வாரே. (சிக்காமணி) தன்பேர் காதவழி தாரமாவது பரவும்படி ஒருவன் புகழ் :புரிந்து வாழவேண்டும்; இல்லையானல் அவன் பிறப்பு இழிவான கழுதைத் தோற்றமாம் என இது இகழ்ந்து உாைத்துள்ளது. சிறந்த பிறவிப்பயன் ஆன புகழை இழந்த பொழுது அங்க மனிதன் இழிந்த விலங்காய இகழ்ந்துபட நேர்ந்தான். Веfter were it to be unborn than to be ill bred. (Raleigh) இழிவாய்ப் பிறந்து வாழ்வதினும் பிறவாமல் இருப்பதே கல்லது என்னும் இது இங்கே ஊன்றி உணாவுரியது. மனிதப் பிறவியின் இனிய பயனப் மருவியுள்ளது புகழே. அதனை எவ்வழியும் உரிமையாத் தழுவி உயர்ககி பெறுக.