பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. புகழ் 1103" 238 பள்ளிகொண்டான்சோமன் பதிஅதியன் நல்லிசையைக் கொள்ளைகொண்டார் என்னே குமரேசா-எள்ளும் வசையென்ப வையத்தார்க்கெல்லாம் இசையென்னும் எச்சம் பெருஅ விடின். (8) இ-ள் குமரேசா! அகியமானும் பள்ளிகோண்டானும் சோம அனும் இசையை என் விழைந்து பெற்ருர்? எனின், இசை என் அனும் எச்சம் பெரு விடின் வையத்தார்க் கெல்லாம் வசை என்க. இது வசை நீங்கி இசை ஒங்குக என்கின்றது. புகழ் என்னும் மகவைப் பெருது ஒழியின் அது உலகத் கார் எல்லார்க்கும் புலையான பெரிய பழியாம். *. பழிபடிந்து பாழாகாமல் ஒளியுடன் உயர்ந்து வாழும் விழுமிய வழியை விழி தெரிய இது நன்கு விளக்கியுளது. பிறந்த மனிதன் விரைந்து பெறவுரிய பெரிய பேறுதெரிய வந்தது. கல்வி செல்வம் முதலியன பெறத்தக்க பேறுகளே ஆயினும் அவை யாவும் சுவையாய் மணம் பெறுவது இசையின லேயாம். ஆகவே இசை பெறுவதே எவ்வழியும் சிறந்த ரிேய பேரும். இசையை ஈட்டி வருபவன் யாண்டும் கிவ்விய நிலையில் உயர்ந்து செவ்வியனுய்ச் சிறந்த பிறவிப்பயனை நீட்டி வருகிருன். இசை= புகழ். வசை=பழி. எச்சம் = மகவு. செவிக்கு இனிய கீதம் இசை ஆம். அது இங்கே புகழைக் குறித்து நின்றது. நல்ல குணம் செயல்களால் உயர்ந்தவனை உலகம் உவந்து புகழ்ந்து பேசும்; அந்தப் பேச்சைக் கேட்பவர் பெரு மகிழ்ச்சி அடைவர். சொல்லுகின்ற காவும், கேட்கின்ற செவியும், உள்ளுகின்ற மனமும் ஒருங்கே உவந்து வர அவ்வுாை இசைந்து வருதலால் புகழ் ஒலியான அது இசை என வந்தது. செவிக்குத் தேன் என இராகவன் இசைதிசை இனிக்கும். நாவில்ை நவிலும் தோறும் நலமுறும் அமுதம் ஆகும். உள்ளுவார் உள்ளம் எல்லாம் அவன் இசை உவகை வெள்ளம். இந்த இனிய மொழிகள் இசையின் ஒளிகளாய் எழுங்துள் ளன. வானேர் கேள்விச் செல்வம் துய்க்க வயிற்ருேர் கிளை தங்