பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1105 பிள்ளை இல்லாத மனிதன் மலடன் என்று எள்ளி இகழப் படுகிருன். பிள்ளைப் பேறுடையவன் எல்லாச்' செல்வங்களும் உடையவனுய் ஒளிபெற்று நிற்கின்ருன். மக்கட் பேற்றினும் மெக்க பேறு வேறு யாதும் இல்லை எனப் பேர் பெற்றுள்ளமை வால் அந்த எச்சமே இசை என ஈண்டு உச்சமாய் வந்தது. இசையிற் பெரியது ஒர் எச்சம் இல்லை. (முதுமொழிக்காஞ்சி) இசையே பெரிய சங்ககி எனக் கூடலூர் கிழார் இங்கனம் குறித்துளார். புகழ் மகவு பெற்றவன் உயர் மகிழ் வுற்றவன். எவ்வளவு செல்வங்கள் எய்தியிருந்தாலும் பிள்ளை இல்லை பால்ை அவன் உள்ளம் உளைந்து வருங்கி அல்லலுறுகின்ருன். வியாச் செங்கோல் விக்கிரன் ஒருநாள் எச்சம் இன்மையின் எவ்வம் கூரா. (பெருங்கதை, 2-11) விக்கிரன் என்னும் சக்கரவர்த்தி சந்ததி இல்லாமையை கெனங்து இங்கனம் உள்ளம் கொந்து அயருழந்துள்ளான். எச்சம் என்று மகவை இங்கே அவன் குறித்திருப்பது கர்ந்து சிக்கிக்க வுரியது. மகவின் வழியே மகிமைகள் விளைந்து வருகின்றன. அரிய இசை இனிய மகவாய் மிளிர்கிறது. பொன்னும் பொருளும் புலமும் நிலமுதலா மன்னுபெருஞ் செல்வமெலாம் மன்னியே---மன்னனென உச்ச நிலையில் ஒளிமிகுந்து வாழ்ந்தாலும் எச்சம் இலையேல் இழிவு. அரிய பெரிய செல்வங்கள் நிறைந்து அரசனுப் உச்ச நிலை யில் உயர்ந்திருந்தாலும் எச்சம் இல்லையேல் இழிவாம் என்றத குல் பிள்ளைப் பேற்றின் பெருமையைத் தெளிந்து கொள் ேெரும். குலம் விளக்கி வருவது உலக விளக்காயுளது. மெய்தானம் வண்மை விரதம் தழல்வேள்வி நாளும் செய்தாலும் ஞாலத்தவர் நற்கதி சென்று சேரார் மைதாழ் தடங்கண் மகவின்முகம் மன்னு பார்வை எய்தாது ஒழியின் பெறுமின்பம் இவனும் இல்லை. (பாரதம்) 139