பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1108 திருக்குறட் குமரேச வெண்பா கழி என்னும் ஊரில் இருந்தவன். பெரும் பொருளுடையவன். பேருபகாரி. கன்பால் வந்தவர் எவர்க்கும் அன்புடன் உதவி யாவரையும் இவன் ஆதரித்து வந்தான். கிருமாலின் கிருநாமம் ஆகிய பள்ளி கொண்டான் என்னும் பேர் இவனுக்குச் சீரோடு சிறந்து கின்றது. மாவலியிடம் வந்து மாயவன் மூவடி மண் வேண்டிய பேர்து அம் மன்னவன் ஈண்டிய உவகையோடு ஈந்தரு ளிபதை எண்ணி விபந்து இதயம் உவந்த உதவிலங்களை உரிமை யோடு இவன் புரிந்து வந்தான். படி அளந்தான் படி அளப்பான் என்று எவரிடமும் நயமாக் கூறி வருவது இவனது இயல்பா யிருந்தது. எளியவர்க்கு அளிபுரிந்து உதவி வந்தமையால் இவன் புகழ் எங்கும் ஒளி மிகுந்து நின்றது. புலவர்களும் இவனை உள் ளம் உவந்து பாடியுள்ளனர். சில பாடல்கள் அயலேவருகின்றன. வள்ளிகொண் டான் மயில் ஏறிக்கொண்டான்மதி போலுமலே வெள்ளிகொண் டான்விடை ஏறிக்கொண்டான் விண்ணவர்க்கமுதாம் துள்ளிகொண் டான்புள்ளில் ஏறிக்கொண் டான்சுட சோபனம்சேர் பள்ளிகொண் டான்புகழ் ஏறிக்கொண் டான் என்று பார்க்கவென்றே. புகழின் உச்சியில் இந்த உபகாரி ஏறி நிற்றலைக் காண விரும்பித் தேவ தேவர்களும் கங்கள் வாகனங்களில் ஏறி கின் ருர் என இது கூறியுள்ளது. கவியின் சுவை கருத வுரியது. செங்கை வரிச்சிலைத் தங்க மதைச் சம்புத் தீவு தன்னில் எங்குவைத் தாலும் இப் பள்ளிகொண்டான் தமிழ்க்கு ஈவன் என்றே திங்கள் இரவி தினம்சுற்றிக் காக்கத் திரை சுருட்டும் கங்கைக்கும் உத்தரத்தே ஒளித்தான் உமை காதலனே. (பரிகாசன்) பொன்மலை இங்கே இருந்தால் பள்ளி கொண்டான் தமிழ்ப் புலவர்க்கு அள்ளித் தக்து விடுவான் என்று கருகிக் கங்கைக்கு வடக்கே வெகு தாாக்கில் சிவபெருமான் ஒளித்து வைத்துள் ளார் என இது உரைத்துள்ளது. இதல்ை இவனது கொடை யும் கடையும் தகவும் புகழும் பிறவும் தெரிய கின்றன. ச ரி க ம் 3. சோமன் என்னும் பேருடைய இவன் காமகிரி என்னும் ஊரில் இருந்தவன். வேளாண்மை புரியும் தாளாண்மையாளன். இனிய ர்ேமையும் இகமான செயலும் கனிவான மொழியும் இவனிடம் இயல்பாயமைக்கிருந்தன. யார் வரினும் முகம்