பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பு க ழ் 1119 ஈகை முதலிய இவனது உபகார நிலைகளையும் அவற்ருல் விளைந்த புகழ் ஒளிகளையும் இன்னவாறு கவிஞர் கன்னயமா விளக்கியுள்ளார். குன்ரு நல்இசைச் சென்ருேர் உம்பல் என்று பலரும் உவந்து புகழ்ந்து வர அரிய கீர்த்தியோடு இவன் வாழ்ந்து வந்துள்ளான். வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் என் பதை இவனுடைய வாழ்வு வளமாய் கன்கு விளக்கி நின்றது. ச ரி த ம் -2 நன்னன் என்னும் இவன் மேலே குறித்த புகழ்க் குரிசி லின் கங்தை திண்மையும் திறலும் செருக்கும் சினமும் இவனி டம இனமா யிசைந்திருந்தன. இவனுடைய கனிமாக் காவின் அருகே ஒடிய வாய்க்காலில் ஒரு நாள் ஒரு பருவ மங்கை நீராடி ள்ை. அதுபொழுது இனிய மாங்காய் ஒன்று நீரில் மிதந்து வங் தது; அதனே அவள் எடுத்தாள்; உண்டாள். அதைக் கண்ட காவின் காவலன் இவனிடம் வந்து சொன்னன். அவளைக் கொன்று விடுமபடி இவன் மரண தண்டனை விதித்தான். பெற். ருேரு உற்ருேரும விரைந்து வந்து இவனேக் கொழுது வணங்கி மன்னித்து அருளும்படி அழுது வேண்டினர். அப் பெண்ணின் கிறை அளவு பொன்னும் எண்பத்தொரு யானைக ஆளும தருவதாக முறையிடடு வேண்டியும் இவன் இசையாமல் அம மங்கையைக் கொன்றே தீர்த்தான். கொடிய கொலை பாத கன் என்று நாடு எங்கும் நெடிய பழி பாவி நீண்டு கின்றது. = மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை புனல் தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு ஒன்பதிற்று ஒன்பது களிற்ருெடு அவள் நிறை பொன்செய் பாவை கொடுப்புவும் கொள்ளான்; பெண்கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரையத்துச் செலிஇய ரோ. (குறுந்தொகை, 292) புனல் தந்த பசுங்காயைத் கின்றதற்காகப் பெண்ணைக் கொலை புரிக்க நன்னன் கொடிய நாகம் சென்ருன் என்று பானர் இவ்வாறு பாடியுள்ளார். இதல்ை இவனது பழி நிலை புலனும். இசை ஒழிந்து வசையுழந்து வாழ்பவர் செத்தவரேயாவார் என் பதை வையம் கண்டு தெளிய நேரே இவன் வாய்ந்து கின்ருன்.