பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 124 திருக்குறட் (கமரேச வெண்பா எவ்வுயிர்க்கும் இாங்கி எவ்வழியும் அருளைச் செய்யுங்கள்; அது திவ்விய மகிமையாய்ச் சிறந்து செவ்விய க.கியை கல்கும் என வளையாபதி என்னும் காவியக் கவிஞர் இவ்வாறு கூறியிருக்கிருள். அருளெலாம் திரண்டு ஓர் வடிவாகிய பொருளெலாம் வல்ல பொற்பொது நாத! என் மருளெலாம் கெடுத்தே உளம் மன்னலால் இருளெலாம் இரிந்து எங்கு ஒளித் திட்டதே? (1} எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பரா பரமே! (2) தம்உயிர்போல் எவ்வுயிரும் தான் என்று தண் அருள்கூர் செம்மையருக்கு ஏவல் என்று செய்வேன் பராபரமே! (3) - (தாயுமானவர்) அருளே வடிவமான இறைவனே நோக்கித் காயுமானவர் இவ்வாறு உருகி வேண்டியிருக்கிரு.ர். உயிர்களுக்கு இாங்கும் அருளாளரின் கிருவடிக்கு ஏவல்செய்யும் படியான அரிய கிருவை அருளுமாறு ஆண்டவனிடம் வேண்டியுள்ளமையால் அருளின் அதிசய நிலையை ஈண்டு உன்றி உணர்ந்து கொள்கிருேம்." பொருளோடு கேர் நிறுத்தி அருளுடைமையின் சீர்மை யைத் தெளிவு.அக்கி யிருப்பது தேர்ந்து சிந்திக்க வுரியது. பொருட்செல்வம் உடல் போல்வது. . அருட்செல்வம் உயிர் அணையது. - அது உடலை வளர்த்து அதனேடு அழிந்து ஒழிகிறது. இது உயிரை உயர்த்தி என்றும் ஒளி புரிகின்றது. அது இழிவான ஈனர் இடமும் இசைந்துள்ளது. இது தெளிவான ஞானிகளிடமே நண்ணியுள்ளது. ஆகவே அங்க இழிபொருளினும் இந்த ஒளி அருளைவே உயிர்க்கு ஊதியமாக மாந்தர் ஒம்பி உய்தி பெற வேண்டும். பூரியார் என்றது இழிந்த இயல்புகளுடைய கீழோரை. பூரிய மாக்கள். (பரிபாடல் 6, 48) பூரியர் எண்ணிடை வீழ்வன். (இராமா, கைகேசி, 22) பூரியர் புணர் மாதர். (இராமா, வனம் 1) பூரியர் குழாத்திடை அறிஞர் போலவே. (இராமா, ஆறு3ே)