பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1129 அருளை ஆண்டு வருபவனிடம் ஆண்டவன் அருளும் நீண்டு வருக லால் அவன் அதிசய பாக்கியவானுய்த் துதி மிகப் பெறுகிருன். Blessed are the merciful: for they shall obtain mercy. [Bible, Matt. 5. 7] கயை யுள்ளவர்கள் பாக்கியவான்கள்; தெய்வ அருளை அவர் கள் கேமே பெறுவார்கள் என ஏசுநாதர் இவ்வாறு கூறியுள்ளார். அருள்வழியில் ஒழுகி வருபவன்பால் ஆனந்த ஒளி பெருகி வருகிறது. வரவே எவ்வழியும் அவன் கிவ்விய மகிமையை எய்தி வருகிருன். உள்ளம் அளியுற உயிர் ஒளியுறுகிறது. தன் ஒக்கும் தெய்வம் பிறிதில்லை தான் தன் இனப் பின்னே மன மறப் பெற்ருனேல்--என் இன இருட்கண்ணே நோக்காது இருமையும் பெற்ருங்கு அருட்கண்ணே நிற்பது அறிவு. (அறநெறி.171) மனிதனுடைய சிறந்த அறிவுக்குப் பயன் அருள் வழி ஒழு குதலே; அவ்வாறு ஒழுகின் அவன் கெய்வ அருளை எய்தி உய்தி பெறுகிருன் என முனைப்பாடியார் இப்படிப் பாடியிருக்கிருள். இன்னுயிர்க்கு இனிய துணை மன்னிய அருளே. அருள் ,செல்வத்துட் செல்வம் என்று முன்னம் குறித்தார்; அது அரிய இனிய சீவ அமுதம் என இதில் உரைத்துள்ளார். மனைவி மக்கள் ஒக்கல் பொருள் முதலிய இனங்கள் எல்லாம் மெய்யான துணைகள் அல்ல; உயிர்க்கு உண்மையான உறுதித் அதுணே அருள் ஒன்றே; அதனே உரிமையாப் போற்றி வருபவர் இருமையும் பெருமை யடைந்து இன்பம் மிகப் பெறுகின் ருர். நாகத் தன்ன பாகார் மண்டிலம் தமவே ஆயினும் தம்மொடு செல்லா வேற்ருேர் ஆயினும் நோற்ருேர்க்கு ஒழியும் ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் 5. பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து பாசிழை மகளிர் பொங்கலத்து ஏந்திய நாரரி தேறல் மாந்தி மகிழ்சிறந்து இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் 142