பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1133 தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர் ஆகலின் நல்வினை அயராது ஒம்புமின்! புலவன் முழுதும் பொய்யின்று உணர்ந்தோன் உலகுயக் கோடற்கு ஒருவன் தோன்றும் அந்நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது இன்னப் பிறவி இழுக்குநர் இல்லை. (மணிமேகலை,25) உயிர்களுக்கு இரங்கி யாண்டும் நல்லது செய்யுங்கள்; அருள் வள்ள லான புத்தாது அறிவுரையைக் கேட்டு நெறியே ஒழுகுங்கள்; அவ்வாறு அருள் வழி ஒழுகினல் இன்னப்பிறவி இல்லாமல் போய்விடும் என மாதவர் இவ்வாறு கூறியுள்ளார். தன் உயிர்க்கு இன்பத்தை நாடுகின்றவன் பிறவுயிர்க்கு அன்பு செய்து ஆ காவு புரியவேண்டும்; அங்கனம் புரிந்துவரின் அவன் பெரியவனுய் உயர்ந்து பேரின்பநிலையைப் பெறுகின்ருன். அருள்புரி மனத்தர் ஆகி ஆருயிர்க்கு அபயம் நல்கிப் பொருள்கொலை களவுகாமம் பொய்யொடு புறக்கணித்திட்டு இருள்புரி வினைகள் சேரா இறைவனது அறத்தை எய்தின் மருள்செய வருவது உண்டோ வானவர் இன்பம் அல்லால். [யசோதரகாவியம்) அருள்சேர்ந்த கெஞ்சினராய் ஆருயிர்க்கு இதம்புரிந்து வரு பவர் இருள் சேராத கிவ்விய இன்பத்தை எய்துவர் என இது குறித்துள்ளது. குறிப்பு கூர்ந்து சிங்கிக்கவுரியது. உள்ளத்தில் கருணை புள்ளவன் உலகத்தில் உயிர்களுக்கு இாங்கி கன்மையே செய்கிருன். செய்யவே தெய்வீக இன்பத்தை எய்திமகிழ்கிருன். வதங்கள் பன்னிரண்டு மேவி வையகத்து உயிர்கட்கு எல்லாம் இதம்செய்து வருந்தில் வெந்தி இடுவெண்ணெய் போன்றுஇரங்கிச் சிதைந்து இன்னுதன செய்தார்க்கும் இனியவே செய்து சிந்தை கதம்கடிந்து ஒழுகல் நல்லோர் கருணையைக் கொடுத்தலாமே. (மேருமந்தரம்,346) கருணையாளர் நீர்மையை இது காட்டியுளது. உயிர்கள் பால் இவ்வாறு உள்ளம் உருகி உதவிபுரிந்து ஒழுகிவருபவர் உயர்ந்த இன்பநிலையை அடைகின்ருர்; பிறர்க்கு இரங்கி அருள் பவன் தனக்கே பேரின்பத்தை கன்கு செய்து கொள்கிருன். The merciful man doeth good to his own soul: but he that is cruel troubleth his own flesh. [Bible; P. 11-17]: