பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1 137 அருள் இழக்க மடமையால் சீவ கோடிகள் அவலமடைந்து இழிந்துள்ளன. அருளுடைமையால் உயர்வடைந்து திகழ்கின் தன. உயர்வு காழ்வுகள் கல்வினே விேனேகளால் முறையே விளைந்து வருகின்றன. இவ்வுண்மைகளை உணர்ந்து யாண்டும் இாங்கி எவ்வுயிர்க்கும் இகமாய் கன்மை செய்ய வேண்டும். பிறவுயிர்களை இனிது பேணி வருபவன் தன் உயிரைப் உபுனித நிலையில் உயர்க்கிப் புண்ணிய போகங்களை ஆக்கி எவ்வழியும் உன்னத நிலையில் உயர்ந்து ஒளி மிகுந்து வருகிருன். தன்னுயிர் தான் பரிந்து ஒம்பு மாறுபோல் மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமேல் இன்னுயிர்க்கு இறைவய்ை இன்ப மூர்த் தியாய்ப் பொன்னுயிராய்ப் பிறந்து உயர்ந்து போகுமே. (1) நெருப்பு உயிர்க்கு ஆக்கி நோய் செய்யின் நிச்சமும் உருப்புயிர் இருவினை உதைப்ப வீழ்ந்தபின் புரிப்புரிக் கொண்டு போய்ப் பொதிந்து சுட்டிட விருப்புயிர் ஆகி வெந்து எரியுள் விழுமே. (2) மணியுயிர் பொன்னுயிர் மாண்ட வெள்ளியின் அணியுயிர் செம்புயிர் இரும்பு போலவாம் பிணியுயிர் இறுதியாப் பேசினேன் இனித் துணிமினம் எனத் தொழுது இறைஞ்சி வாழ்த் திர்ை .(3) (சீவக சிந்தாமணி) தன் உயிரைப் போல் மன் உயிரை ஒம்பிவரின் அவன் இன் அனுயிர்க்கு இறைவனப் இன்பமூர்க்கி ஆகிருன்; கொடுமை செய்யின் இழிந்து காகதுன்பக்கில் வீழ்கிருன் என இவை உணர்த்தியுள்ளன. அருளால் விளையும் ஆனந்த நிலையையும் அதனை இழந்த போது எய்தும் இழிஅயர்களையும் இங்கே தெளி வாய்த் தெரிகிரும். உயிரின் உயர்வுகள் உணர வந்தன. மணி உயிர். பொன் உயிர். வெள்ளி உயிர். செம்பு உயிர். இரும்பு உயிர்.