பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1143 வது எதுவோ அது கரி என வந்தது; காத்தில் உள்ள கெல்லிக் கனிபோல் தெள்ளத்தெளிய விளக்குவது என வும் விளங்கியுளது. தான் நேரே கண்ட காட்சியைக் காணுதவர்முன் தெளி வாய்ச் சொல்லுபவன் சாட்சி என நேர்ந்தான். உறுதியான சாசனங்களைக் காட்டியுரைப்பவன் சான்று எனவங்தான். பெரிய யானையை நேரே பார்ப்பது போல் தெளிவான பார்வையின் தீர்வை கரி என அமைந்தது. சரியான கரி தெரிய கின்றது. ஐந்து அவித்தான் ஆற்றலுக்கு இந்திரனே சாலும் கரி (குறள் 25) என முன்னம் ஒரு சாட்சியைக் காட்டி யிருக்கிரு.ர். அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை என்பதற்கு ஞாலமே கரி என்று சீலமாய் ஈண்டு உரைத்துள்ளார். உரைத்த உண்மை களை உறுதியா வலியுற்றுத்தற்குச் சான்றுகள் தோன்றின. கண்டதைக் காட்டுவதே கரி ஆதலால் காணுததை அது காட்ட நேராது. கேர்ந்துள்ளது கேர்ந்து கொள்ள வத்தது. பிறர்க்கு அல்லலைச் செய்தவரே அல்லல் அடைவர்; அருள் ஆளர் அதனை யாண்டும் செய்யார்; ஆகவே அல்லல் அவர்க்கு இல்லாமல் போயது. இல்லாத ஒன்றை எவரும் காண முடியாது; அதனைக் கண்டு கூற வுரியவர் ஒருவரும் இலர் என்னும் துணி வால் ஞாலம் கரி என்ருர். காட்சி இல்லாமையால் சாட்சியும் இல்லை. அந்த இன்மை வழியே உண்மை தெளிவாயது.

நீண்டு பாக்து யாண்டும் விரிந்துள்ளமையால் உலகிற்கு ஞாலம் என்று ஒரு பெயர் அமைந்தது. உலகில் வாழுகின் ை உயிர் இனங்களை ஈண்டு அது உரிமையா உணர்த்தியுளது. வளி, மல்லல், மா என்னும் இம்மூன்றும் ஞாலத்திற்கு விசேடனங்களாய் வந்துள்ளன. தக்க சாட சி என்பதைத் தெளி வாக விளக்க வளி முதலா இங்கனம் முறையே வாைக்துள்ளார். வளி = காற் று. மல்லல் = வளம். மா=பெரிய, மல்லல் வளனே. (தொல்காப்பியம், உரி, 7)

  • -

கிலவளமும் நீர்வளமும் பல வளங்களுக்கும் மூலகாரணமா யுள்ளன. மனிதன் மூச்சால் வாழுகிருன்; ஞாலம் காற்ருல் வாழ்கிறது. அதன் இயக்கத்தால் யாவும் இயங்கி வருகின்றன.