பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1153 உடலுக்கு உரிய போகம் பொருள் இல்லார்க்கு இல்லை. உயிருக்கு உரிய இன்பம் அருள் இல்லார்க்கு இல்லை. அருள், எவ்வுயிர்க்கும் எவ்வழியும் இதம் புரிகிறது; புரிய வே அது புண்ணியமாய் வருகிறது; வாவே அது துறக்க இன் பத்தை அருளுகிறது. ஆகவே அருளுடையவர் அமாாாய் அவ் அலகத்தை உரிமையுடன் கேரே அடைகின்றமை அறிய வந்தது. அறம் பெரிது ஆற்றி அதன் பயன் கொண்மார் சிறந்தோருலகம் படரு நர். (பரிபாடல் 19) புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அருமறைப் பொருளே. (இராமா, நகர், 5) புண் ணியம்புரி பூமிபார் அதில்வரு போகம் நண்ணி யின்புறு பூமி வானடு என்ப. + - (திருவிளையாடல், நகர் 103) புண்ணியம் புரிபவர் சுவர்க்க போகத்தை அடைவர் என இவை குறித்துள்ளன. அங்கப் புண்ணியம் அருளிலிருந்து விளை வதால் அவ்வுலகம் அருளுடையார்க்குக் கனி யுரிமையாய்,து. ஆகவே அருள் இல்லார்க்கு அது அணுக அரிய நிலையமாய் கின்றது. அருள் அதிசய இன்ப நலங்களை அருளி வருகிறது. பொருள் இல்லையானல் வறியனுய் இவ்வுலகில் அல்லல் அடைவாய்; அருள் இல்லை பால்ை பாவியாய் அவ் வுலகில் பரிந்து வருங்துவாய். பொருளைத் தேடி நல்ல செல்வனுய் இங்கே கல. மாய் வாழுக; அருளைப் பேணி அரிய தருமவானுய் அங்கே பெரிய இன்டங்களைப் பெறுக. இருமையும் பெருமை யு.றுக. பொருளை யும் அருளையும் போற்றி வருபவர் இம்மையும் மறுமையும் இன்பம் உறுவர். இது சாதுவன்பால் தெரியவந்தது. ச ரி த ம். இவன் வணிகர் மரபினன். கல்ல கல்வியறிவுள்ளவன். பல மொழிகள் பயின்றவன். இவனுடைய மனைவி பெயர் ஆகிாை. மகா பகிவிசதை. அக்க உத்தமியோடு கூடி இவன் இல்வாழ்க்கை புரிந்து வந்தான். வருங்கால் காலவேற்றுமையால் பொருள் வளம் குறைந்தது. குறையவே இவன் உள்ளம் மறுகினன். பொருள் இல்லையானுல் வாழ்வு அல்லலான இருளே என்று கருதி வருக்கிய இவன் அதனை விரைந்து கேடத் துணிந்தான். 145