பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருளுடைமை 1157 பேரழகி. அவளோடு அமர்ந்து இனிய போகங்களை நுகர்ந்து குடிகளை ஒம்பி வந்தான் வருங்கால் ஒரு காள் வேட்டைக்குப் போனன். காட்டில் ஒரு முனிவரைக் கண்டான். உலக ஆசைகளை அறவே துறந்து எதையும் மதியாமல் அரிய கவகெறியில் இருக்க அந்தப் பெரியவர் மகிமையை உணராமல் எளிதா எண்ணி அவருக்கு இவன் இடையூறு செய்ய நேர்ந்தான். 'காட்டில் மிருகங்களை வதைத்ததோடு அமையாமல் அரிய கவ முனிவர்க்கும் அல்லல் செய்ய கேர்ங்காய்! பொல்லாத இந்தக் கொடுமையால் உனக்குக் கொடிய துன்பங்கள் உளவாம்;உறுவ தை உணராமல் ஊறு செய்வது பெரிய பரிதாபம்’ என்று கலி யாணமித்திரன் என்னும் வணிகன் இவனுக்குப் புத்திபோதித் தான். அக்தப் போதனையை உணர்ந்தான்; வேதனையுழந்தான்: மாதவர் அடியில் விழுந்து தொழுது கன்னை மன்னித்து அரு ளும்படி ஆதாவோடு பரிந்து பணிந்து வேண்டினன். அருளொடு படர்தல் செய்யாது ஆருயிர்க்கு அழிவு செய்தே பொருளொடு போகம் மேவிப் பொறியிலேன் என் செய்கேனுே? அருளினது உருவம் ஆய அடிகள்தும் அடிகட் கேயும் தெருளலன் நினைந்த தீமைச் சிறியனேன் என்செய்கேனே?” இவ்வாறு தான் செய்த செயலுக்கு இரங்கி இவன் மறுகிய பொழுது முனிவர் கருணைபுரிந்து தேற்றி இவனுக்கு உறுதி மொழிகள் பல கூறி உய்தி கலங்களை அருளினர். அறிவில ராய காலத்து அமைவில செய்த எல்லாம் நெறியினில் அறிவது ஊற நின்றவை விலகி நிற்பர் அறியலர் வினைக ளாலே அருநவை படுநர்க்கு ஐய! சிறிய நல் வதங்கள் செய்த திருவினை துமர்கண் காணுய்! [யசோதாகாவியம்) அறியாமையால் செய்த பிழைகள் அறிவு தோன்றி அருள் புரிந்தபின் அகன்றுபோம்; இனி நீ சேமம் அடைவாய் என்.த. மாதவர் ஆதரவு கூறவே இவன் உள்ளம் தேறினன். அரசபதவி யை மகனிடம் தந்து விட்டுத் துறவியாய் அருள மம் பூண்டு கின்று அதிசய ஆனந்த நிலையை அடைந்தான். அருள் அம்ருல் அது கொடியகேடு என்று உணர்ந்து தெளிந்து கருணையாளனுய் இவன் கதிபெற்று நின்ற நிலை யாண்டும் துதி பெற்று வக்கது.