பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1169 உரிமையோடு ஒாாமல் அவமே பழுதுபடுத்துவது பெரிய துயரமாய்த் தெரியவந்தது. உரைகள் அங்க உள்ளத்தின் உயர் வையும் தெளிவையும் உருக்கத்தையும் உணர்த்தியுள்ளன. உண்ணும் உணவுகளால் உயிர் வாழ்வுகள் கடந்து வரு கின்றன. அவ்வுணவு ஈனம் ஆனல் அதனையுண்ணுபவரும் ஈன மாயிழிவுறுகின்றனர். அந்த இழிவு கோாமல் வாழ்பவரே விழு மியாாய் விளங்கி வியனிலையில் உயர்ந்து வருகின்ருர். உயிர்கள் ஒம்புமின் ஊன்விழைந்து உண்ணன்மின் செயிர்கள் நீங்குமின் செற்றம் இகந்து ஒரீஇக் கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு மதிகள் போல மறுவிலர் தோன்றுவிர். (வளையாபதி) கொன்று.ான் நுகரும் கொடுமையை உள் நினைந்து அன்றே ஒழிய விடுவானேல்--என்றும் இடுக்கண் எனவுண்டோ இல்வாழ்க்கை யுள்ளே படுத்தானம் தன்னைத் தவம். (அறநெறிச்சாரம்62) ஊன் உண்டல் செய்யாமை செல்சார் உயிர்க்கு. (நான்மணி.40) ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே. (இனியவை5) கொன்று உண்பான் நாச்சாம். (சிறுபஞ்சமூலம்,10) வாயில் சுவைவெஃகி மான்கொன்று மீன்கொன்று நாய்ஒத் துழல்வார்க்கு நாவளவே-போயிழிந்தால் இன்னுது இனிதென்று அறியார் இதற்காக மன்னவூன் தின்றல் வடு. (பாரதம்) புழுவும் தசையும் வெண்ணினமும் பொதிந்த குரம்பை வீக்குதற்குக் கழியூன் நுகர்ந்தோர் கொடுநரகில் கற்ப காலம் கிடந்தழுந்தி விழைவின் முன்னர்த் தாம் நுகர்ந்த விலங்கும் அவர்தம் மெய்த் தசையை அழிவெம் பசியால் பறித்தருந்தும் என்னும் பான்மை அறிந்தேயோ? (காசிகாண்டம்) 147