பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1170 திருக்குறட் குமரேச வெண்பா மானமார் மனித கிை மாநிலத்து உதித்து வந்தாய்! ஊனினை நுகர நேரின் ஊனமாயுழல்வா யந்தோ! ஞானமும் தயையும் நீதிநலங்களும் மருவி வாழ்க; ஈனமா யிழியின் என்றும் இழிதுயர் எய்து மன்றே. (பாண்டியம்) தன்உடல் வளர்க்க மன்னுயிர் அழிக்கும் தாழ்வின்ை ஒழியவிட்டு என்றும் இன்னுயிர்க் கிரங்கி இதம்புரிந் தருளின் ஈசனின் அருளெலாம் எய்திப் பொன்னுயி ரா.கி மணியுயி ராகிப் புனிதபே ரின் பங்கள் பொருந்திப் பின்னுயிர் என்றும் பிறவியை அடையாப் பேறுவந் துமை அடைந் திடுமே. (இந்தியத்தாய் நிலை) ஊன் அருங்கல் ஈனம்; அதனை யாதும் யாண்டும் உண்ண லாகாது; உண்டால் இம்மையிலும் மறுமையிலும் கடுமையான துயரங்கள் கொடுமையாய் கெடிது நேரும் என இவை குறித் துள்ளன. குறிப்புகள்கூர்ந்து ஒர்ந்து சிங்கித்து உனா வுரியன. புலால் மறுத்தல் என அதிகாரம் குறித்துள்ளார். அங்தப் பேருக்குத் தக்கபடியே புலால் உண்பான் என்று கூறியிருக்க லாம்; அவ்வாறு கூறவில்லை. வேறு பெயராலும் குறிக்க வில்லை. ஊன் என்றே உரைத்துள்ளார். ஒர் உயிர்க்கு உறையுளாயுள்ள உரிமையும், அது பிரிந்தால் பிணமாயிழிந்து விழும் சிறுமையும் தெரிய ஊன் ஈண்டு உறவாய் கின்றது. கல்ல சீவ கிலையை அழித் துப் புலையை வாய்மடுப்பது பொல்லாத கொடிய பாவமாம். தசையும் துவும் தடியும் விடக்கும் புலையும் பிசிதமும் புலாலும் புண்னும் புரணியும் வள்ளுரமும் புலவும் ஊன்பெயர் இற்றி இறைச்சி என்பவும் ஆகும். * (பிங்கலந்தை) ஊனுக்கு இவ்வாறு பேர்கள் அமைந்துள்ளன. பெயர் களின் குறிப்புகளால் இதன் ஈனமான இழிபுலைகள் தெளிவாம். பிற உயிர்கள் அழிய வருவதால் ஊன் உணவு பழிபாதக