பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1175. கின்றது. கொலையான புலையைத் தின்பது பொல்லாத் தீனி ஆதலால் அது இனிது ஆகாமல் இன்னததாய் இழிக்கது. தன் உயிரைப் போல் பிற உயிர்களைப் பேணிவரின் பெரிய மகிமைகள் காணவரும். அவ்வாறு பேணுமல் பிழையாய் ஊன் அருங்க கேரின் அது ஈனமாய் இழிதுயரங்களையே தரும். எவ்வுயிரும் பராபரன் சந் நிதிய தாகும் இலங்கும் உயி ருடலனைத்தும் ஈசன் கோயில் எவ்வுயிரும் எம்உயிர் போல் என்று நோக்கி இரங்காது கொன்றருந்தும் இழிவி ைேரை வவ்வியம துாதரருந் தண்டம் செய்து வல்லிரும்பை உருக்கியவர் வாயில் வார்த்து வெவ்வியதி யெழுநரகில் வீழ்த் தி மாரு வேதனை செய் திடுவர் என ஒதும் நூலே. (சிவஞான திபம்) o உயிர்கள் இறைவனுடைய உருவங்கள்; அவற்றை இனிது பேணி வருபவர் ஈசன் அருளை எய்தி இன்புறுகின் ருர்; அங்கனம் செய்யாமல் சிவர்களைக் கொன்று கின்பவர் பாவிகளாயிழிந்து பாழ்காகில் விழ்ந்து ஆழ்துயரங்களை து கர்கின்ருர் என இது குறித்துள்ளது. குறிப்புகள் கூர்ந்து கோக்கி ஒர்ந்து சிங்கிக்க வுரியன. கருதி உணரும் அளவு உறுதி நிலை தெரிய நேர்கிறது. பிராணிகளைக் கண்டபோது அவை,பிரானுடைய வடிவங்க ளாக எண்ணி,இதம் புரிபவர் புண்ணிய மகான்களாய்ப் பொலிங்து திகழ்கின்றனர். சிவதயை மனிதனைத் தெய்வீக நிலையில் உயர்த்தியருளுகிறது. புலை நீங்கிப் புனித நிலையில் வாழ்ந்து வருபவரிடம் தெய்வத்திருவருள் கேரே சேர்ந்து வருகிறது. ஊன்தின்பவர்க்கு அருள் இல்லை என்ற தல்ை அதைக் கின்னுதவாது சீர்மையும் நீர்மையும் தெரிய நின்றன. புலை ஒழிந்த பொழுதே நிலை உயர்ந்து ளது. பிறவுயிர்களுக்குத் துயர் கோாமல் தூய நெறிகளில் ஒழுகிவருகிற மனிதனே புனிதனுயு யர்ந்து பிறவித்துன்பங்கள் நீங்கிப்பேரின்பம் பெறகேர்கின்முன். அல்லலின்றி நல்ல நிலையில் ஒருவன் உயரவேண்டுமானுல் பொல் லாத புலைகள் அவனிடமிருந்து ஒல்லையில் நீங்கி ஒழிய வேண்டும்.