பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1177 கொன்றுான் நுகரும் கொடுமையை உள் நினைந்து அன்றே ஒழிய விடுவானேல்--- என்றும் இடுக்கண் என உண்டோ இல்வாழ்க்கைக் குள்ளே படுத்தாளும் தன்னைத் தவம். (அறநெறிச்சாரம்) தவகதியை வேண்டுபவர் உயிரில்சடம் தினல் தவிர்க தவம் அழித் தாங்கு அவகதியை வேண்டுபவர் கழுகுநரி செயும் தொழிலை அயரா நாட சிவகதியும் திருமால் தன் திகழ்கதியும் அயன்கதியும் தெய்வ லோகத்து உவகதியும் இகந்து எரியும் துர்க்கதியில் விழ்வர் பரஞ் சோதி யாணை. (அருட்பிரகாசம்) மருவா8ணப் பெண் ஆக்கி ஒருகணத்தில் கண்விழித்து வயங்கும் அப்பெண் உருவானே யுருவாக்கி இறந்தவரை எழுப்புகின்ற உறுவன் ஏனும் கருவானே யுற இரங்காது உயிருடம்பைக் கடிந்துண்ணும் கருத்தனேல் எம் குருவாணை எமது சிவக் கொழுந் தானே ஞானிஎனக் கூருெ ணுதே. (அருட்பா) ஊனைத் தின்ப கால் விளையும் இழிவுகளையும் அழிவுகளை யும் இப்பாகாங்கள் தெளிவா விளக்கியுள்ளன. பொருளின் குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து உணர்பவர் புலைப்புசிப்பின் பொல் லாப் புலைகளை நன்கு தெளிந்து கொள்வர். தீயபுலையை நீக்கித் து.ாய நிலையில் எவ்வழியும் பழகி வாழ்வகே திவ்விய வாழ்வாம். ஊன் உணவு உள்ளத்தைக் கடுமையாக்கி நல்ல அருளைக் கெடுத்து விடும். இவ் வுண்மை உதிரன் பால் உணா நின்றது. ச ரி க ம் . இவன் ஒர் அரசர் மரபினன். அறிவுகலமுடையனுய் ஒழுகி வந்தான். ஒருநாள் முனிவர் ஒருவருக்கு இனிய விருந்து புரிந்தான். அதில் இவனுடைய பரிசாாகன் புலாலைப் பக்குவ மாச் சமைத்துக் கக்க ஒரு பாத்திரத்தில் அமைத்துச் சாதுரிய மாய்க் கொண்டு வந்து வைத்தான். அதனை அருங்கவர் அறிக் 148