பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1187 வருகிறது. அருள் கிலை அழியின் கொல்லாமை ஒழியும். ஒழியவே அது கொல்லாமையைக் கொன்ற கொலையாய் கின் தது. எல்லா மேன்மைகளையும் இனிய பேரின் பங்களையும் கா வல்ல கொல்லாமையைக் கொல்லுவது எவ்வளவு கொடிய கொலைl எத்துணை நெடிய இழவு! இதனை உய்த்து உணமவேண்டும். அருள் யாது? எனின், கொல்லாமை; அல்லது யாது? எனின், கொல்லுதல் என இங்கனம் பதம் பிரித்துப் பொருள். காணலாமாயினும் பிரியாமல் கேரே காண்பதில் அரிய பல பொருள்கள் பெருகியுள்ளன. அவ் வுண்மைகளை தண்மையாய் ஊன்றி உணர்ந்து உரிய கயங்களைத் தேர்ந்து கொள்ளுக. பொருள் என்ற த உறுதிப் பொருள் ஆகிய கருமத்தை. ஊன் தினல் பொருள் அல்லது என்ற தல்ை, புலால் உண் பவன் புண்ணியத்தை இழந்தான்; புகழை இழக்கான்; சீவகயை ஆகிய திவ்விய செல்வத்தை இழந்தான்; பாம்பொருளின் பெருங்கருணையை இழந்தான் என அவனுடைய இழவுகளும் இழிவுகளும் அழி தயாங்களும் விழி தெரிய வந்தன. புலைப் புசிப்பு கொலைப் பழியோடு கூடி வருதலால் அருள் நீர்மையை அடியோடு அவன் இழந்து விடுகிருன். இனிய புண்ணியமான அது கொலையவே கொடிய பாவம் குடி புகுந்து கொள்கிறது. ஒளி ஒழிய இருள் புகுதல் போல் அருள் கழிய அவம் ஆகிறது. As heat is opposed to cold, and light to darkness, so grace is opposed to sin. (T. Brooks) குளிருக்குச் குடும் இருளுக்கு ஒளியும் போல் பாவத்துக்கு அருள் மாருயுள்ளது என்னும் இது இங்கே அறிய வுரியது. அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை என்ருர் தேவர்; பாவப் புலையுள்ள இடத்தில் அருள் கில்லாது என்பதை இதில் அறிந்து கொள்கிருேம். அருள் என்பது உயிரின் ஒளி, 7 کتنے لگے۔ ஒழியின் அவ்வாழ்வு எவ்வழியும் மருளான துயா இருளே. Grace comes into the soul, as the morning Sun into the world. (T. Adams) உலகிற்கு உதய சூரியன் போல் உயிர்க்கு அருள் ஒளி புரிந்து வருகிறது என்னும் இது ஈண்டு உனா வுரியது.