பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1188 திருக்குறட் குமரேச வெண்பா Grace is but glory begun, and glory is but grace perfected. (Jonathan Edwards) அருள் குணமாண்பிலே உதிக்கிறது; அம் மாட்சி அருள் ஆட்சியைப் பூரணமாக்குகிறது என இது குறித்துள்ளது. அருள் இருந்தால் அந்த மனிதன் பெருந்தன்மையாளளும் உயர்ந்து கிகழ்கிருன். எந்த வகையிலும் யார்க்கும் இடர் புரியா மல் எங்கும் எவ்வுயிர்க்கும் இாங்கி இதம் புரிந்து வருகிருன். உள்ளத்தில் இாக்கம் இல்லையேல் அந்த மனிதன் கொடிய வன விலங்காய் நெடிய துயரங்களைச் செய்ய நேர்கின்ருன். அத ஞல் அவன் உயிர்க்கு வெய்ய துயரங்களே விளைகின்றன. வெளி யே எவ்வளவு தான கருமங்களைச் செய்தாலும் ஊன் உண்பவன் ஊனமாய் இழிந்து உயர் கலங்களை இழந்து விடுகின்ருன். தானங்கள் செய்தான் ஏனும் தருமங்கள் புரிந்தான் ஏனும் வானங்கள் விழைந்து நோக்க மகங்களை வனைந்தான் ஏனும் ஊனங்கள் விளையும் அந்தோ ஊனினை உண்பான் ஆயின் ஈனங்கள் எய்திப் பின்னர் இழி நரகு அடைவன் அன்றே. (1) உன்னுயிர் போல நோக்கி உற்றுள உயிர்கள் ஒம்பின் இன்னுயிர் முதல்வன் ஆன ஈசனின் அருளை எய்தி மன்னிய வளங்க ளோடு மகிமைகள் பலவும் மல்கிப் பொன்னுயிர் ஆகி மேலாம் புனித பேரின்பம் பூண்பாய். (பாண்டியம்) இவை ஈண்டு உன்னி யுனாவுரியன. இனிய செயல்களாலே யே மனிதன் புனிகளும் உயர்நிலைகளை அடைகின்ருன். இன்னுக ஊன் எவ்வழியும் தாழ்வாய்த் துயரையே தரும் ஆதலால் அதனை உண்ணுதவனே புண்ணியவானுய் உயர்ந்து எண்ணிய இன்ப கலன்கள் யாவும் எய்துகின்றன். தலைமையான நிலைமைக்குக் தகுதியான அடையாளம் புலையூன் புசியாமல் ஒழிதலே.