பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 192 திருக்குறட் குமரேச வெண்பா கொள்ளுவோரே மெய்யறிவாளராகின்ருர். துக்கம் நீங்கிச் சுகம் கோய வேண்டுமானல் புலை கோயாமல் நிலை உயரவேண்டும். துக்கத்துள் துரங்கித் துறவின் கண் சேர்கலா மக்கட் பிணத்த சுடுகாடு--தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலம்கெட்ட புல்லறி வாளர் வயிறு. (நாலடி,121) உயிர் நீங்கிய உடல்களைக் குடல்களில் குவித்துவைக்கலால் புலால் உண்பவர் வயிறு புலையான சுடுகாடு எனக் குறித்துளது. பினங்களை இடுகின்ற இடுகாடாகவும் சுடுகாடாகவும் தன் வயிற் றைப் பாழ்படுத்தாமல் குணங்களோடு உயர்ந்து கொள்ள வேண் டும். உயிர்க் கொலைகள் மருவியகோடு பலவகையிலும் இழிந்து அருவருப் படைந்துள்ளமையால் ஊன் ஈனம் என இகழகேர்ங் தது. ஊன் உண்ணுதவர் உயர்ந்த சாகி ஆகவும்,அதனை உண்பவர் தாழ்ந்த குலத்தவராகவும் எண்ணப் படுகின்றனர். தம்மினும் உயர்ந்தோர் கீழோர் தமதில்லத்து அறலுண்டாரேல் அம்ம அங்கு அவரும் கீழ் என்று அவர்மனைப் புனலும் உண்ணுர் இம்மனிதர்கள் தாம் சீச்சி ஈனர் தம் மலத்தை யுண்டு விம்முடற் பன்றி யாதி விரும்பியுண் டுவப்ப தென்னே? [L&ుక&ు] வெந்தடி தின்ற வெந்நோய் வேகத்தால் மீட்டு மாலைப் பைந்தொடி மகளிர் ஆடும் பந்தென எழுந்து பொங்கி வந்துடைந்து உருகி வீழ்ந்து மாழ்குபு கிடப்பர் கண்டாய் கந்தடு வெகுளி வேகக் கடாமுகக் களிற்று வேந்தே. (சீவகசிந்தாமணி) மறிப்பல கொன்றும் மடப்பினை வீழ்த்தும் கறிப்பல வெஃகிக் கறித்தவர் தம்மை உறுப்பு உறுப்பாக அரிந்து அரிந்து ஊட்டி ஒருப்பர் சிலரை அவரும் ஒருப்ால். (சூளாமணி) இட்ட இரை ஆசையால் எய்தியமீன் துாண்டில்வாய்ப் பட்டதென நாவிரசம் பார்த்துலகர்-கெட்ட இருளார் உலகத்தில் எய்துவர்கள் என்ருர் அருளாரும் நெஞ்சத் தவர். (ஊனழிவு) அம்மா என அலற ஆருயிரைக் கொன்று அருந்தி இம்மானுடர் எல்லாம் இன்புற் றிருக்கின் ருர்