பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1194 திருக்குறட் குமரேச வெண்பா நிலைகளிலேயே ஒங்கி ஒளிபெற வேண்டுமானுல் புலை நிலைகள் யாவும் நீங்கி ஒழியப் புனித நிலை ஓங்கி வர வேண்டும். ஊனை நீ உண்டால் உனை நரகம் உண்ணுமென ஞான முனிவர் நயந்து சொன்ன-மான மொழி ஒர்ந்து தெளிந்தே உறுதி யுடன் ஒழுகின் ஆர்ந்து பெறுவாய் அருள். இதனைத் தேர்ந்து தெளிந்து கொள்ளுக. புலைப்புசிப்பு கொலைப்பழி மண்டிக் கொடுங்துயர்களை விளைத்து வருதலால் அதனையுடையவன் அடுநாகடைகிருன். இவ்வுண்மை பகன்பால் நேரே நன்கு அறிய கின்றது. ச ரி க ம். இவன் ஒர் அசுரன். ஏக சக்கிாம் என்னும் வனத்தில் இருக் தான். விலங்குகளையும் பறவைகளையும் விழைந்து கின்று வந்த வன் அவ்வனத்தருகே யிருந்த வேத்திரகீயம் என்னும் ஊருள் புகுந்து மனிதர்களைக் கொன்று உயிர்க் கொலைகள் புரிந்தான். முதியவர் சிலர் இவனிடம் வந்து பணிவுடன் மதிநலம் கூறினர்: "தானவர் பதியே நாளும் தங்களுக்கு நல்ல உணவுகளைக் கொண்டு வந்து தருகிருேம்; வாரத்துக்கு ஒருமுறை ஊன்பலி யும் கொடுத்து விடுவோம்; எங்கள் ஊருள் வராமல் இருந்தருள வேண்டும்” என்று பரிந்து வேண்டினர். அந்த வேண்டுகோளுக்கு இவன் இசைந்து கொண்டான். ஊரார் உறுதி கூறியபடியே மாருமல் நடந்து வந்தனர். ஊனும் உணவும் தங்து நாளும் கைங்து வருகிற அந்த மாந்தருடைய நிலைமையை அவ்வூர்க்கு வங்கிருக்க வீமன் அறிந்தான். அக்கொடியவனுடைய அடுகிறலையும் படுபுலை யையும் தெரிந்தான். அன்று அவனுக்கு விருந்து செய்யவுரிய முறையில் நேர்ந்துள்ள பார்ப்பனி உள்ளம் மறுகிப் பரிதாப மாய் உரைத்த வுரைகள் வீமனுடைய உள்ளத்தை உருக்கின. அருளில் இதயமும் நெறியில் சரிதமும் அழகில் உருவமும் அதிர் குரல் பொருளில் உரைகளும் உடையன் முழுதுடல் புலவு கமழ தரு பொறியினன் மருளு நரியோடு கழுகு தொடர் தர வலிய பிணம் நுகர் சுவையருது