பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 3.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புலால் மறுத்தல் 1197 விலை செய்பவர் என இழிபழியை அவர்க்கு ஈனமா ஏற்றி அழி துயர் செய்து எவ்வழியும் பழி விளைத்து வருகின்ருய். புலையுணவில் நீ கொண்ட ஆசை பலவழிகளிலும் சேமாய்ப் பலரையும் கொலைப்பாவங்களில் ஆழ்த்திக் கொடிய பழிகளையும் கெடிய அழிவுகளையும் கடுமையாய் விளைத்து வருகிறது. நீ கின் லும் ஊனுல் நேர்ந்து வருகிற சேக்கொலைகளையும் காசப்புலை களையும் கொஞ்சம் உன்னியுணர்ந்தால் கெஞ்சம் இாங்கி ஊனப் புலையை உண்ணுமல் ஞானத் தெளிவோடு உயர்வாய். உறுதி உண்மைகளைக் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து உய்தி பெறுக. கொல்லாது என்று ஒரு பாடம் உள்ளது. இங்கே அது இசைவாயில்லை. ஊன் கருதல் என்ற குறிப்பால் அதனைக் கொள் ளுதல் என்பதே இங்கு இனமாய் நன்கு பொருங்கியுளது. விலக்கு ஊனே க் கொடுப்பவனே விட அதனேக் கொள்ளு கின் வனேயே கொலேபாதகன் என்று பிராணிகள் உள்ளம் கொகித்து எள்ளி இகழ்ந்து யாண்டும் கடுத்து வைகின்றன. ஊனே அவன் உண்ண உயிரை இவன் கொல்கின்ருன் ஆன புலேகொலேகள் யாவுக்கும்---ஊனினைத் தின்பவனே காரணனுப்த் தீ நரகுக்கு ஆளாகித் துன்பமுழந் துள்ளான் தொடர்ந்து. ஊன் தின் னும் புலையாள ன் அதனேவிற்கும் விலையாளனிலும் கொடிய கொலையாள வைான் என இது குறித்துளது. கொலை விளைவு புல் விழைவில் உள்ளமையால் இங்கனம் குறிக்க நேர்ந்தான். புலைப் புசிப்பு இல்லையேல் கொலைப்பழி யிலையாம். விலே படைத்தார் ஊன்வேண்ட அவ்விலேதான் வேண்டி வ8லபடைத்தார்க்கு எம்முயிரை வைக்கின்ரும் இன்ன கொ8லபடைத்தா குேகொடியன் என்பனவே போலத் தலைஎடுத்து வாய் திறப்ப தாமிவையோ காணிர்! [1] கொடைக்கொட்டி விற்பானும் கொள்வானு மன்றி இடைச்செட்டி ளு ற்பொருளை எய்துவான் போல முடைக்கொட்டு முத்துரைத்து மூடிக்கொண்டு ஏகும் குடைச்சிட்டன் ஆருயிர்க்கோர் கூற்றமே கண்டீர்! (2) (நீலகேசி)