பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1408 திருக்குறட் குமரேச வெண்பா நல்ல உயர்வெல்லாம் நாவில்பொய் இல்லான ஒல்லை அடையும் உவந்து. மெய்யே பேசி மேன்மைகள் பெறுக. 296. போத உதத்தியனேன் பொய்யாமை பூண்டதனுல் கோதிலறம் கொண்டான் குமரேசா-திதகன்ற பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும். (6) இ-ள் குமரேசா! பொய்யாமை ஒன்றையே பேணி வங்க உதக் இயன் எல்லா அறங்களையும் என் ஒருங்கே எய்தின்ை? எனின், பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை எல்லா அறமும் தரும் என்க. மெய்யின் விளைவுகள் வியஞய் விளங்கி நின்றன. பொய் சொல்லாமை போன்ற கீர்த்தி வேறு யாதும் இல்லை; புண்ணியங்கள் எல்லாவற்றையும் ஒருங்கே அது கொடுத்தருளும். மெய்யே பேசி வருவதால் விளைந்து வருகிற உயர்க்க மேன்மைகளை யெல்லாம் தொடர்ந்து உணர்ந்து வருகிருேம். சிறந்த மனிதன் எனப் பிறக்கவன் தனது வாழ்நாளில் அடைந்து கொள்ள வேண்டிய உயர்க்க பொருள்கள் புகழும் புண்ணியமுமே. புகழ் இம்மையில் மதிப்பாய் இனிய ஒளி வி வருகிறது. புண்ணியம் மறுமையில் பேரின்பம் தருகிறது. இரு மையும் பெருமையாய் உயிர்க்கு இன்பம் தருகிற புகழ் புண்ணி யங்கள் பொய்சொல்லாத புனிதனிடம் உரிமையோடு தனியே உவந்து வந்துசேருகின்றன. சத்திய சீலன் என்னும் பேரை ஒருவன் பெறுவான் ஆனல் அவன் அதிசய மகிமையாளய்ை எவராலும் துதி செய்யப் பெறுகிருன். அாசன் புலவன் வள்ளல் விான் எனப் புகழ்கள் பல வகையில் வருகின்றன. அங்க இசைகள் எவற்றினும் சக் கியவான் என்னும் சீர்க்கி உத்தமமாய் உயர்ந்து ஒளி விசி கிற்கிறது. உண்மையாளன் உயர்பாய்ை ஒங்கி வருகிருன்.