பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1410 திருக்குறட் குமரேச வெண்பா வாய்மையின் வழாது மன்னுயிர் ஒம்புநர்க்கு யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள். (சிலப்பதிகாரம்) வாய்மையும் அருளும் உடையான் எல்லாப் பெரும் பொருள்களையும் ஒருங்கே அடைந்து கொள்கிருன். அவன் அடையாத அரிய பொருள் யாதும் யாண்டும் இல்லை என்னும் இது ஈண்டு எண்ணி உணர வுரியது. கூற்றுவன் தண்டம் இல்லேக் கோள்செய்யும் தீமை யில்லே மாற்றரும் அசனி தீய வளிமழை அராக்கள் செய்யும் சாற்றரும் வருத்தம் இல்லைத் தரித்திரம் சற்றும் இல்லை ஏற்றமார் மெய்யே கூறிப் பொய்யினை இரித்து ளார்க்கே. (1) பொய்யுளான் மறந்தோர் மெய்மை புகலினும் பொய்மையாகும் உய்யுமாறு என்றும் இல்லை உறுதி என்பதும் சாராது கொய்யுமா மலர்ப்பூஞ் சோலை சூழ்குவ லயத்து நாளும் நையுமாறு எதுசெய்தாலும் பொய்தவி லாமை வேண்டும். (2) (காசி ரகசியம்) பொய்யாமையால் உளவாம் இன்ப கலன்களையும் பொய் மையால் விளையும் துன்ப நிலைகளையும் இவை விளக்கி யுள்ளன. மெய்யுரை விளங்குமணி மேலுலக கோபுரங்கள் ஐயமிலே நின்றபுகழ் வையகத்து மன்னும் மையல்விளை மாநரக கோபுரங்கள் கண்டீர் பொய்யுரையும் வேண்டா புறத்திடுமின் என்ருன். (சிந்தாமணி, 2869) மெய்யால் நிலைகின்ற புகழும் மேல் உலக இன்பங்களை அருளுகின்ற புண்ணியமும் உளவாம்; பொய்யால் இம்மையில் நெடிய பழியும், மறுமையில் கொடிய காக சயாமும் உண்டாம் என இது உாைத்துளது. உரைக் குறிப்புகள் ஊன்றி உணரக் தக்கன. பொய் புலைத் துயர் பொய்யாமை கிலைக்க சுகம். பொய்யான்பொய் மேவான் புலால் உண்ணுன் யாவரையும் வையான் வழிசீத்து வாலடிசில்-நையாதே ஈத்துண்பான் ஆகும் இருங்கடல்சூழ் மண்ணரசாய்ப் - பாத்துண்பான் ஏத்துண்பான் பாடு. (ஏலாதி, 44)