பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த. வ ம் 1239 இவர் உரிமையோடு தொழுது வருகின்ருர் திருக்கழுக்குன்றம் என அக்கலம் இப்பொழுத வழங்கப் படுகிறது. இன்றும் அங்கே இரண்டு கழுகுகள் உச்சிப்போதில் வந்து உணவு உண்டு போகின்றன. அக்தப் பட்சி தரிசனம் மிக்க பாக்கியம் என்று மக்கள் ஆவலோடு பார்த்து வருவது நாளும் வழக்கமாயுள்ளது. தவம் புரிவதும் அதன் பயனே அடைவதும் முன்னைத் தவம் உடையார்க்கே இனிது கைகூடும்; மற்றவர்க்கு அவை அவமாய் மாறுபடும் என்பதை இவர் வமாய் கேரே விளக்கி யுள்ளனர். உம்பரெலாம் அதிசயிக்க உயர்சித்தி யுறவேண்டி உளம் துணிந்து சம்பரன் சம்பாதி என் பார் தவம்புரிந்தார் சம்புவந்து காட்சி தந்தார் எம்பரம! முத்தி என்ருர்; சித்தியை நீர் கருதியிந்தச் சிறுமை செய்தீர்! கம்பமுறு கழுகுகளாய் இருமின் எனக் காளகண்டன் கரந்து போளுர், தவம் மேற்கொண்டும் இவர் அவம் அடைந்துள்ளமையை இன்னவா.அ முன்னேர் பலரும் பரிந்து குறித்துள்ளனர். உள்ளம் புனிதமாய் ஒர்ந்து தவம்செய்க கள்ளம் அவமாம் கடிது. எவ்வழியும் தவம் செய்து பழகுக. 263. ஏளுே தவம்புரியா தில்லிருந்தார் சேந்தனர் கோனை சோமர் குமரேசா-தானே துறந்த்ார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். (3) இ-ள் குமரேசா தெளிந்த ஞானமுடைய சேந்தனரும் சோம ரும் துறந்து தவம் புரியாமல் மனையில் என் அமர்ந்திருந்தார்? எனின், துறக்கார்க்குத் துப்புரவு வேண்டி மற்றையவர்கள் தவம் மறந்தார் கொல் என்க. எல்லா நலன்களையும் நல்க வல்ல தவத்தை ஒல்லையில் செய்து உய்தி பெருமல் ஒதுங்கி யிருப்பவரை கினேங்து இது பரிந்து வந்துள்ளது. பரிவு வைத்தின் மகிமையை மருவியது.