பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 4.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. த. வ ம் 1241 தானம் தவம் என்று இரண்டும் தருமத்தின் ஊனும் உயிரும் உணர். (அரும் பொருளமுதம்) புண்ணியத்தின் உடலையும் உயிரையும் இதில் காணுகின் ருேம். காணவே கவக்கின் அதிசயமகிமையை அறிந்து கொள் ேெரும். உருவக ஒப்புமைகளை இதன் கண் கூர்ந்து உணர்பவர் அரிய பல பொருள்களை நெறியே ஒர்ந்து தெளிவர். கித்தியமான பேரின்ப நலன்களை அருளுகலால் கவக்கை ஞானிகள் எவ்வழியும் உரிமையோடு உவந்துசெய் கின்ருர். இனிய உயிர்க்கு உய்தி தருவது அரிய கவமே. அதனைக் கழுவிவரும் அளவு விழுமிய மகிமைகள் விளைந்து வருகின்றன. பொருளொடு போகம் புணர்தல் உறினும் அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின் இருளில் கதிச்சென்று இனியிவண் வாரீர் தெருள லுறினும் தெருள்மின் அதுவே. (வளையாபதி) உலக நிலையில் பொருளும் போகங்களும் கிறைங்கிருக்கா அலும் தவம் செய்யுங்கள்; அது பிறவித் துயரங்களை நீக்கி உங்க ளுக்குப் பேரின் பங்களை அருளும் என இது குறித்துள்ளது. கூடித் தவம்செய்து கண்டேன் குரைகழல் --- தேடித் தவம்செய்து கண்டேன் சிவகதி வாடித் தவம்செய்வ தே தவம் இவைகளே ந் து டின் பலவுல கோரெத் தவரே. (திருமந்திரம்) தவம் செய்தால் சிவகதி எய்தும்; அது செய்யாவிடின் வெய்ய அவநிலையாம் எனக் கிருமூலர் இவ்வாறு கூறியுள்ளார். நஞ்சு குடித்தாலும் நவையின்று தவம்நின்ருல் அஞ்சி ஒளித்தாலும் அரண் இல்லை தவம் உலந்தால் குஞ்சரத்தின் கோட்டிடையும் உய்வர் தவம் மிக்கார் அஞ்சலிலர் என்றும் அறனே களை கண் என்பார். (சீவகசிந்தாமணி) தன்னையுடையானத்தவம் எவ்வழியும் செவ்வையாகக் காத் தருளும்; அதனைச் செய்தவர் யாண்டும் உய்தி பெற்று என்றும் பேரின்ப நிலையில் உயர்கின்ருர் என இது உணர்க்கியுள்ளது. 156