பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/1

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1602 திருக்குறட் குமரேச வெண்பா நாளடி யிடுதல் தோன்று நம்முயிர்ப் பருகும் கூற்றின் வாளின் வாய்த் தலைவைப் பாக்குச் செல்கின்றாம்வாழகின்றாமே! (குண்ட லகேசி) நாம் வாழ்ந்து வருகின்ற வாழ்வின் நிலைமையை இவை வரைந்து காட்டியுள்ளன. பொருள் நிலைகளைக் கூர்ந்து நோக்கி ஓர்ந்து சிந்திக்க வேண்டும். உற்றார் உறவினர் யாரோ இறந்து போயினார் என்று பரிந்து அழுகின்றாயே; நீ நாளும் செத்துக் கொண்டிருக்கின்றாயே! உனக்கு நிதமும் அழுதுகொள்! என உணர்த்தி யிருக்கிறார். நாளும் நாள் சாகின் றோமே நமக்கு நாம் அழாதது என்னே! என்று பரிந்து வியந்து வினவியிருக்கின்ற இந்தப் பரிதாப நிலையைக் கருதி யுணர்பவர் உறுதி கலனை விரைந்து உரிமையுடன் அடைய நேர்வர். உயிர் ஈரும் வாள் என்று நாளை உணர்வார் மிகவும் அரியர் ஆதலால் அந்த அருமை தெரிய உணர்வார்ப் பெறின் என்றார். - ஈரும்வாள் உயிர்க்கு என்றறி யார் எழு வாரம் ஆகி வருந்தின மானிடர் தாரம் ஆதியும் தாமும் நிலை என்றே கோர மாய குழிவிழு வார்களே. அழியும் ஆக்கைகொ டேயழி யாப்பதம் கெழுவு வார்பெற்ற தே நல்ல கேள்வியும் அழியும் ஆக்கை தனையழி யாதென விழுவ ரே நர கக்குழி வெய்யரே. (சிவதருமோத்தரம்) நாளை ஈரும் வாள் என்று எண்ணி உய்யாமல் வையமையல் களில் ஆழ்ந்து வருவதை எண்ணாமல் மாந்தர் இழிந்து ஒழி கின்றாரே என மேலோர் இங்கனம் பரிந்து வருந்தியுள்ளார். நாள் கழியும் தோறும் ஏதோ பெரிய ஊதியம் பெறுபவர் போல் உள்ளம் களித்து வருகிறார்; உள்ளே நடந்து வருகிற அழிவு வேலையை உணர்ந்து கொள்வாரில்லை. உண்மை உணர் வார்க்கு நாள் வாளாம்; அவ்வாறு உணராதார்க்கு அது கேள் போல் தோன்றுகிறது. அத்தோற்றம் ஏமாற்றமாய் இழவைக் கூட்டி விடுகிறது. அழிவு கேருமுன் தெளிவாய் உய்தி பெறுக.. தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும்-ஆற்ற