பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. .ெ ம ய் யு ன ர் த ல் 1747 காண்பது அறிவு என்ற த புறக் காட்சியையும் அகக் காட்சி யையும் கூர்க்க ஒர்க்க உணர வங்தது. மெய்ப்பொருளை மெய் யாகக் காணின் பொய்ப் புலைகள் பொன்றி ஒழிந்து போம். தன்னுள்ளே சகத்தும் அந்தச் சகத்துளே தானும் ஆகப் பின்னம தின்றி என்று காண்குவன் பிரமன் தன்னில் மன்னிய தான லாமை மற்ருெ ன்று காண்கலான் என்று அன்னகா லத்தில் முத்தன் ஆகுவன் யோகி அன்றே. (கூர்மபுராணம் சாங்கியம் 22) மெய்ப்பொருளைக் காணுகின்ற காட்சியையும் அதனைக் கண்டவாது அரிய மாட்சியையும் இ.த கன்கு காட்டியுள்ளது. உண்மைப் பொருளை நண்மையா ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வுணர்வு உயிர்க்கு உய்தி புரிகிறது. கெடுகின்ற பூதங்கள் தோறும் கெடாதே வடுவின்றி நின்ற மறைப்பொருள் தன்னை நடுவென்று கண்டவன் நல்லன எல்லாம் கடுகின் துணையொழி யாவகை கண்டான். (1) ஒத்தெங்கும் ஆய ஒருமைப் பொருளினை அத்தன்மையில்ை அறியும் அவனே செத்தும் பிறந்தும் திரியா வகைதனை மெய்த் தன்மையிலே புகவிடு கின் ருன், (பகவற்கீதை) எல்லாப் பொருள்களிலும் ஈசன் நிறைந்திருக்கிற நிலையைக் காண்பவனே மெய்க்காட்சி யுடையவன்; அங்க மெய்யறிவாளன் பிறவித் துயரங்கள் நீங்கிப் பேரின்ப முத்தியை நேரே அடை கிருன் என்.று கண்ணன் இவ்வண்ணம் கூறியுள்ளான். சிறங்க அறிவுடைய மனிதப் பிறவியை அடைந்திருக் கிருேம்; இது இறந்து படுமுன் விரைந்து உயிர்க்கு உய்தியைச் செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு செய்பவனே மெய் யறிவன். உயிர் தயர் நீங்கச் செய்வதே உயர் ஞானம். ஆமினி மூப்பும் அகன்றது இளமையும் தாமினி நோயும் தலைப்படும் - யாமினி மெய்யைந்தும் மீதுார வைகாது மேல்வந்த இயைந்தும் ஆய்வது அறிவு. (வெண்பாமாலை, 187)