பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1796 திருக்குறட் குமரேச வெண்பா என்.றம் ஒழியாமல் வழிவழியே தொடர்ந்து வளர்க்க வருவது எனப் பிறவியின் இறவாமையை விளக்கி கின்றது. தவல் இல் அருநோய். (ஐங்குறுநூறு 320) தவலே நன்று. (புறம் 238) தவலில் தண்கழகத்து. (கலி 136) தவாஅலியர். (பதிற்றுப்பத்து 14) தவாஅக்காதல். (பெருங்கதை 1:44) தவாத இவ்வினை. (குண்டலகேசி) இவற்றுள் கவா உணர்த்தி கிம்கும் பொருள்களை அறிக. அளபெடைகளை கோக்கி இசை கிறைக்க வந்தது. இசைகெடின் மொழிமுதல் இடைகடை நிலைநெடில் அளபெழும் அவற்றவற் றினக்குறில் குறியே. (நன்னுரல்) இக்க இயல் விகி இங்கே சிக்கிக்க வுரியது. பிறவியும் அவாவும் பிள்ளையும் காயுமாய் உறவுரிமை மருவி வந்துளது. ஈனும் என் மது இவ்வுலகில் இவை இயல்பாய்ப் பெருகி எவ்வழியும் பாவி வருகிற பேறு தெரிய. எனக்குத் தாய் ஆகியாள் என்னையிங் கிட்டுத் தனக்குத் தாய் நாடியே சென்ருள் - தனக்குத்தாய் ஆகி அவளும் அதுவானுல் தாய்த் தாய்க் கொண்டு ஏகும் அளித்திவ் வுலகு. (நாலடி 15: அன்னே எத்தனே எத்தனை அன்னையோ அப்பன் எத்தனை எத்தனை அப்பகுே பின்னை எத்தனே எத்தனை பெண்டிரோ பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ முன்னம் எத்தனை எத்தனை சென்மமோ மூட குயடி யேனும் அறிந்திலேன் இன்னம் எத்தனை எத்தனை சென்மமோ என்செய் வேன்கச்சி ஏகம்ப நாதனே! (பட்டினத்தார்; யாதும் தொலையாமல் யாண்டும் கிலையாய்ப் பிறப்புகள் பெருகி வருகிற விரிவைக் கருதிப் பெரியோர்கள் இவ்வாறு