பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1626 திருக்குறட் குமரேச வெண்பா ஊறுதுய ரும் சுகமும் உற்றனு பவிக்கும் பேறுபெறு தன்னுடலும் ஆவி பிரியுங்கால் கூறு சிறு புள் எழு குடம்பை.என அப்பால் வேறுபடும் என்னில் இனி மெய்யுறவு யாதே? (மெய்ஞ்ஞான விளக்கம்) புனையும் கூடு கழிந்து புள் போவதுபோல் போகி வினைசெய் உடலை விட்டு விண்ணுேர் வடிவை எடுத்தான். (ஞானவாசிட்டம், தாதுரன் 57) மரத்தை விட்டெழும் வான்சிறைப் புள் எனப் புரத்தை விட்டனன் பொன்னுலகு எய்தின்ை. (பாகவதம் 4:5.11) சுற்றும் கட்சி ஒழியத் துறந்து வான் உற்ற புள்ளின் உடல் விட்டு ஒளித்துளான். (பிரமோத்ரகாண்டம் 10, 41) கருவி தளர்ந்தொரு விகிர் தி பிறந்திரு கால்கை குறைந்திரு கண் பஞ் சிட்டு இருவினை யின் பயன் என வுயர் கொம்பில் இசைத்த குடம்பை தனித்துஒழியக் குருவி பறந்தென உயிர் செலும் அன்றிகல் கொடிய நமன்தமர் கொடுபோமுன் வருவி கணங்களை அடிகளை நம்பினன் மறையோய் ! மதுரையில் இறையோயே! (மதுரைப்பதிற்றுப்பத்து 57) பன்னகம் அண்டசங்கள் பரகாயம் தன் னில் பாய்வோர் துன்னுதோல் முட்டை யாக்கை துறந்துசெல் வதுவேபோல உன்னிய உயிர்கள் தூல வுடல்விட்டு வானி னுாடு மன்னிடும் நனவு மாறிக் கனவினை மருவு மாபோல். (சிவஞான சித்தியார் 2, 38} உடலில் மீளச் சேர்ந்தனள் கூடு ஆர் புட் போல. (வா சிட்டம், சிகி 173) உடம்பை விட்டு உயிர் பிரிங்து போவது குடம்பையை விட்டுப் பறவை பறந்து போவது போலாம் என இவை யாவும் உசைக் துள்ளன. குறிப்புகளைக்கூர்ந்து கவனித்துக் கொள்ளவேண்டும். புள் ளும் குடம்பையும் உயிரும் உடம்பும் கவிகளின் உள்ளங்