பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1634 திருக்குறட் குமரேச வெண்பா It is as natural to die, as to be born. (Bacon) பிறப்பது போலவே இறப்பதும் இயல்பே. Our birth is nothing but our death begun. (Young! கம் பிறப்பு நமது இறப்பின் ஆரம்பமே. Death borders upon our birth. (Bishop Hall) இறப்பு என்பது பிறப்பின் அருகே இயல்பாயுளது. சாகல் பிற க்கல்களைக் குறித்து மேல்காட்டு அறிஞர்களும் இவ்வண்ணம் எண்ணி இணைத்து இனமா உரைத்துள்ளனர். அல்லல்களும் அழி துயர்களும் வழி வழியே பெருகி வருகிற பிறவிகளில் வீழாமல் மெய்யுணர்வுடன் கப்பி உயிர்கள் உய்ய வேண்டும் என்று கருதியே தேவர் பரிவோடு இவ்வாறு தெளிவான அறிவு கலன்களை இதில் அருளியுள்ளார். முற்றியபின் கனியுதிரும் பழுப்புற்றுத் தழையுதிரும் முழுது மேநெய் வற்றியபின் விளக்கவியும் என்ன ஓர் திடமுண்டு மக்கள் காயம் பற்றிய அக் கருப்பத்தோ பிறக்கும்போ தோபாலப் பருவத் தோமூப்பு உற்றபின்போ வீழ்வதேன நிலையின்றேல் இதன் பெருமை யுரைப்ப தென்னே. (நீதி நூல்) கருவிடை அழுந்தும் துன்பமும் நிலத்தின் H கண்ணுறின் கொடியவெந் நோயால் மருவுவெந் துயரும் நரை திரை எய்தி வருந்திடும் துன்பமும் கூற்ருல் உருவினை ஒருவும் துன்பமும் மீட்டும் கருக்குழி ஒன்றுறு துயரும் வெருவர எண்ணி இன்பவி டதனை மேவ நன் குனர் தலே வேண்டும். (ஆனந்தத்திரட்டு) துரங்கி விழிப்பதுபோல் தொல்லுலகில் தோன்றியே ஏங்கி உயிர்கள் இயங்குமால்- பாங்கு தெரிந்து விரைந்து தெளிவடைந்து கொண்டால் பிரித்து வராபின் பிறப்பு.