பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1980 திருக்குறட் குமரேச வெண்பா பொய்யுருவாய்ப் பொருளற்ற புல்லுருவாய்ப் பொலிவிழந்து புலத்து போமே உய்யஒரு வழிபொய்யா மொழியுள் ஒரு மொழியேனும் உணர்வ தாமே. (4) புன்மையர் எம்மொழியும் எந்நாடும் எவருமே காணுத இலக்கி யங்கள் நம்மொழியாம் செம்மொழியுள் நலமாகப் பெருகியுள நயந்து நோக்கி இம்மொழியின் இனிமைகளை இயல் நிலையின் தலைமைகளை இனிது மாந்திச் செம்மையுடன் உயராமல் புன்மையராய்த் திரிகின்ருர் தீமை என்னே ! 45) பரிதாபம் தண்டமிழின் தனிநாடே தமிழர்களின் தாயகமே ! தரும நீதி மண்டிநின்ற மண்டலமே வழுதிமன்னர் முழுதுலகும் மாறச் செங்கோல் கொண்டினிதா ஆண்டுவந்த குல நிலமே ! பல மேன்மை குலாவி ஒங்கப் பண்டிருந்தாய் ! இன்றிருக்கும் பரிதாபம் ஒழிவதென்ருே பகர்வாய் அம்மா ! (6) மதிகேடு வான் ஆண்ட தேவர்களும் மண் ஆண்ட மன்னர்களும் மகிழ்ந்து வந்து தேன்.ஆண்ட மொழி என்றுன் செழுங்கலேயைத் தீஞ்சுவையைத் தேர்ந்து மாந்தி ஊன் ஆண்ட சுவைகளெலாம் அயல்ஒதுக்கி உன்னையே ஒர்ந்து கொண்டார் மான் ஆண்ட தமிழ்த்தாயே! உன்மக்கள் உனையுணரார் மதிகே டென்னே ? 47) சீரழிவு எந்தவகை நாட்டினும் தம் தாய்மொழியை மேன்மையா இயம்பக் காண்பார்