பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1642 திருக்குறட் குமரேச வெண்பா எனதெனச் சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக்காமேன் தினைபெய்த புன்கத்தைப் போல சிறியவு மூத்தவு மாகி நுனைய புழுக்குலம் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட இனைய உடம்பினைப் பாவி யான் எனது என்னலு மாமோ? (குண்டலகேசி) சளசள என வா யூறல் தடையின்றி ஒழுகப் பற்போய்த் தளர் வொடு மெலிந்து கூனித் தசையற வற்றி முற்றிக் கிளர்நடை ஒழிந்து பாயல் கிடைகொளும் கிழவுத் தன்மை அளவுகண் டிலர் கொல் உற்ற இளமையேர்க்கு அகம் களிப்பான். (குசேலம்) ஒரிடத்து ஒர் உயிர் நெடுநாள் உறைவதிலே உத தினனும் நீரிடத்துப் புரிவினையால் நிலையிலுடம் பிதுபோளுல் பாரிடத்தில் சுவர்க்கத்தில் பவர்க்கம தில் எங்கெனினும் சேரிடத்தில் சேருமிது திண்ண மெனத் தெளிந்திடுதி. (சேதுபுராணம்) உள்ளது கரக்குமிக் கள்ள யாக்கை மேம்படு குற்றம் முன்ருெடு வழங்கலின் உண்டி நல் லரசு தண்டத்தின் வகுத்த கோள்பிணி அகப்பட் டிருப்பினும் தோன்றுவது பின்னர்க் காப்பது முன்னே. (ஆசிரியமாலை) புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ரா.கி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான். (திருவாசகம்) புன்புலால் நரம்பு என்புடைப் பொய்யுடல் அன்பர் யார்க்கும் அருவருப் பல்லவோ என் பொலா மணியே இறையே இத்தால் துன்ப மன்றிச் சுகம் ஒன்றும் இல்லையே. (தாயுமானவர்) ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலே ஊன்பொதிந்த பீற்றல் துருத்தியைச் சோறிடும் தோற்பையைப் பேசரிய