பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1646 திருக்குறட் குமரேச வெண்பா ஒர்நிலையும் இன்றி உயிரலையும் ஒர்ந்தினிது சேர் நிலையை எய்தும் வரைஎன்று-- நேர்தெளிந்த ஞான முனிவர் நயந்து மொழிந்ததை ஆனவரை தேர்க அமர்ந்து. தொகைமலர் அலங்கல் சூடித் து நறும் சுண்ணம் அப்பிப் புகைநனி கமழவூட்டிப் புறஞ்செயப் பட்ட மேனி சிகையினேர் சிறுமுள் தீண்டச் சிதைந்தழுக்கு ஒழுகு மாயின் தகைபெரி துடைத்து நாணும் இதனை நாம் மகிழ்தல்நெஞ்சே! (சூளாமணி) வேற்கண் மடவார் விழைவொழிய யாம் விழையக் கோற்கண் நெறிகாட்டக் கொல்கூற் றுழையதா நாற்ப திகந்தால் நரைத் துாது வந்த தினி நீத்தல் துணிவாம் நிலையா திளமையே. (வளையாபதி) எடுத்த தேகம் இறக்கு முனே எனக் கொடுத்து நின்னேயும் கூடவும் காண்பனே? அடுத்த பேரறி வாய் அறி யாமையைக் கெடுத்த இன் பக் கிளர்மணிக் குன்றமே! (தாயுமானவர்). ஊன உடலை ஒருவி உயரின்ப மானவி டெய்தல் மதி. புலைக்கூடு புகாமல் புனித விடு புகுக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. நில்லாதவற்றை நிலை என்று எண்ணுதல் புலே. "செல்வம் நிலையில்லாதது. அது உள்ள பொழுதே நல்லது செய்க. நாள் கழிவது உயிர் கழிவதாம். சாவு நேருமுன் ஆவதை அடைக. நேற்று இருந்தவன் இன்று இரான். ஒருகணமும் வாழ்வது அரிது. உடம்பை விட்டு உயிர் போய்விடும். இறப்பும் பிறப்பும் மாறி மாறி வரும். ஓர் உடம்பிலும் உயிர் நிலையாய் நில்லாது.

i 1

34-வது கிலேயாமை முற்றிற் று.