பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 5.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1660 திருக்குறட் குமரேச வெண்பா அடல்=அடுகல்; கொல்லுதல். உயிர்க் கேடு செய்து வரும் புலக்கேடுகளை அடியோடு அழித்து ஒழிக்க வேண்டும் என உணர்த்துகின்ருர். ஆதலால் இவ்வாறு கடுமையான சொல்லால் குறிக்கார். ஒட்டிய பாசங்களை விட்டொழிவது உய்தியாம். பிறவித் துயரில் ஆழ்த்தி உயிரை ஒயாமல் வகைத்து வருகிற புலப்பகையை வதைத்து வென்றவனே என்.றும் குன்ருத பேரின்ப நிலையை நேரே பெறுகின்ருன். பொறிவாயில் ஐந்து அவித்த போது சீவன் சிவன் ஆகிருன். புலன் கசையாளர் புலையாயிழிந்துழல்கின்ருர்; அதனை ஒழிக்கவர் உயர்ந்த நிலையில் ஒளிமிகுந்துள்ளனர். அகப்பற்றை அட்டுப் புறப்பற்றை விட்டுப் புனிதனுய் உயர்க என்பது அடல், விடல் என்ற களுல் அறிய வங்தது. விடுதலைக்கு மூலகாரணமாய் அதெல் முதன்மை எய்தியுள்ளது. அவ்வுண்மையை வைப்பு முறையால் ஈண்டு நுட்பமா ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். ஐம்புலன் அடல்வேண்டும் விடல்வேண்டும் ஒருங்குவேண் டியஅனைத் தையும் என்று உம்பரும் பரவும் ஒரு தமிழ் வேதம் உரைத்தலான் ஒரிரு வகையா நம்புறச் சார்பை வெறுத்தவா வறுத்தைம் புலைெழித்து ஒழுங்கின டருமச் செம்பொருள் காண்ப தறிவறி யாமை சிதைத்தல்வீடு எனத் திகழ் தருமால். (வைராக்கியதீபம், 37) அவா. அ.முத்து ஐம்புலன் ஒழித்து இருவகைப் பற்றும் அற்றபோதுதான் ஆன்மா பாமான்வை மருவுகிறது என இச குறித்துளது. இக்கக் குறளை முதலில் கழுவித் துறவியின் தகவை ஆசிரியர் விரித்து விளக்கியிருக்கிருள். தத்துவ கிலைகள் உய்த்துணாத்தக்கன. மாசு கழிந்த அளவு தேசு மிகுக்க வருகிறது; பாசம் ஒழிக்கபொழுது ஈசன் ஒளி விளங்கி மிளிர்கிறது. உம்பரும் பாவும் ஒரு தமிழ் வேதம் எனக் திருக்குறளை இவர் உவந்த புகழ்ந்து குறிக்கிருக்கிருச். வேண்டிய எல்லாம் என்றது வாழ்வின் இயல்பை ஊன்றி யுனா வந்தது. வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்கள் எல்லாம்