பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2096 திருக்குறட் குமரேச வெண்பா அரசே! நின்கைகள் யானே ஏற்றம் குதிரை ஏற்றம் போர் ஆற்றல் முதலிய அரிய பல வினேகளேச் செய் கின்றன; அதல்ை வலிய ஆயின; சோறு உண்னும் தொழில் அல்லது பிறிது தொழில் அறியா ஆகலின் என் கைகள் மெல்லியனவா யுள்ளன என்று கூறியுள்ள குறிப்புகள் கூர்ந்து ஒர்ந்து சிந்திக்கவுரியன. வேங்தர்க்கும் மாங் தர்க்கும் நாட்டுக்கும் நல்லது கூறி ஒல்லும் வாய் எல்லாம் எல்லார்க்கும் யாண்டும் இதம் புரிவதே புலவர் தோழில் என்பதை இங்கே தெளிவாய்த் தெரிந்து அவரது சீர்மையை உணர்ந்து கொள்கிருேம். உலக உயிர்கள் உவந்தினிது வாழப் புலவர் உணர்ந்து புரிவர்- நலமுறவே நாடி வருதலால் நல்லோரென் றெல்லோரும் கூடி வருவர் குவிந்து. கல்வி ஆகிய இனிய அமுதத்தை யுடைவர் எவர்க் கும் இனியராய் எங்கும் இதம் புரிந்து எவ்வழியும் நலமே செய்து வருவர். அவர் புகழ் ஒளி மிகுந்து வரும். இவ் வுண்மை கோவூர்கிழார்பால் தெரிய வந்தது. ச ரி த ம். கோவூர்கிழார் என்பவர் இற்றைக்கு ஆயிரத்து எண்ணுவாறு ஆண்டுகட்கு முன்னர்ச் சோழ நாட்டிலே கோவூர் என்னும் ஊரில் இருந்தவர். வேளாளர் மரபினர். இளமையிலேயே அரிய நூல்கள் பலவும் பயின்று பெரிய புலவராய் இவர் விளங்கியிருந்தார். சிறந்த குண சிலர். யாவர் மாட்டும் பேரன்புடையவர். எளிய பிராணி களிடமும் அருள் புரிந்து ஒழுகிய விழுமிய கிலேயினர். இவருடைய கல்வியறிவையும் பெருங்தகைமையையும் அங்காட்டு வேந்தன் அறிந்து இவரைத் தன் பால் அழைத்து வைத்து அன்பு புரிந்து வந்தான். கலங்கிள்ளி என்னும் அச்சோழ மன்னன் அவையில் இவர் தலைமைப் புலவராய்த் துலங்கியிருந்தார். உணர்வு நலம் கனிந்த இவருடைய இனிய மொழிகளேக் கேட்டு அரசன் முதல்