பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2099 கின்றும் கற்றவர் தலைமையாய் ஓங்கி உயர்ந்தார்: அவ்வாறு கல்லாதவர் கடையரா யிழிந்தார். என்னபாடு பட்டாவது யாரிடமேனும் எப்படியும் கற்றுக்கொள்க என்று உரைக்க நேர்ந்தவர் ஒர் உவமை யை நயமா எடுத்துக்காட்டி இதமாயுணர்த்தியுள்ளார். உடையார் என்றது செல்வரை. இல்லார் என்றது வறியரை. உயர்வு தாழ்வுகள் இங்ங்னம் உணர வந்தன. பொன் நெல் முதலிய பொருள்களேயே உடைமை என்று உலகம் கருதிவருதலால் அவற்றை உடையவரை இவ்வாறு குறித்தார். கல்வியுடைமையைக் கருத்துடன் ஈட்டுக என்று சொல்லுங்கால் செல்வமுடைமையும் சேர வந்தது. இரு பேருடைமைகளும் உலகவாழ்வுக்கு உயர் பேறுகளாய் எவ்வழியும் ஒளிபுரிந்துள்ளன. மனிதனுக்குக் கண்கள் போல மனித வாழ்வுக்குச் செல்வமும் கல்வியும் ஒளிசெய்து வருகின்றன. இரண் டும் விழிகள் போல் வழி கோலி வருதலால் எவ்வழியும் பாவரும் இந்த உடைமைகளே உரிமையுடன் ஈட்டிக் கொள்வது இயல்பான கடமைகளாய் வந்தது. காட்சி புரிந்தருளும் காமர் விழிபோல மாட்சி புரிந்து மனுக்குலத்தை-ஆட்சியாப் பல்வழியும் ஊக்கிப் பயன்காட்டி நிற்றலால் கல்வியும் செல்வமும் கண். (தருமதியிகை551) மனுக்குலத்தின்கண்கள் இங்ங்னம் காண வந்துள் ளன. காட்சிகளின் மாட்சிகளைக் கருதியுணர்பவர் வாழ் வின் உறுதி யுண்மைகளே ஒர்ந்து தேர்ந்து கொள்வர். கல்வி உயிர்க்கு உரிய உறுதித்துனே. செல்வம் உடலுக்கு உரிமையான உதவி நிலே. கற்றவர் பொருள் உற்றவராய் உயர்கின்ருர்: கல் லாதவர் பொருள் இல்லாதவரா யிழிகின்ருர். மிடிய சாயிருப்பதினும் மடையராயிருப்பது மிகவும் இழிவாம். கல்லாதவர் கடையரே என்றதில் ஏகாரம் அவரது பரிதாபமான இழிபுலேயைத் தெளிவா விளக்கியுளது.