பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 1ՈՐ. திருக்குறட் குமரேச வெண்பா கல்வியறிவுடைய மேலோரைத் தொழுது வழிபட்டு எவ்வழியும் பணிவாய் ஒழுகி எப்படியும் கல்வியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பார் எக்கற்றும் கற்ருர் . என்ருர் ஏக்கம் ஈங்கு ஆக்கமுற உற்றது, ஏக்கறுதல் = ஆசையால் ஏங்கி அடங்கி நிற்றல். ஏக்கம் = கவலை; நசை; பேராசை. - - அரிய ஒரு பொருளே அடைய அவாவி யாவும் துறந்து ஆவலோடு அலமங்து நிற்கும் கிலே ஏங்கல் என நேர்ந்தது. இதனடியாக ஏக்குறல் தோன்றியுள்ளது. நோக்கின் தென்திசை அல்லது நோக்குருன்; ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்துளான் வாக்கில் பொய்யான் வரும் வரும் என்று உயிர் போக்கிப் போக்கி உழக்கும் பொருமலான். (இராமா, மீட்சி, 208) இராமனே எதிர் நோக்கிப் பரதன் இருந்த பரிதாப கிலேயை இது குறித்துள்ளது. இதனைக் கருதிக் காண் பவர் எவரும் உள்ளம் உருகிமறுகுவர். ஏக்குற்று ஏக்குற்று. என்னும் இக் குறிப்பை உள்ளச் செவியால் கூர்ந்து ஒர்ந்து உயிர்த்துடிப்பை உணர்ந்து கொள்கிருேம். அண்ணனேக் காணக் கருதி ஈண்டு இளையவன் ஏங்கி இருந்தது போல் கல்வியைப் பூணக் கருதி இளை யவர் யாவரும் யாண்டும் நீண்டு இருக்கவேண்டும். ஏக்கமுற்றும் கற்றவர் ஆக்கம் மிகப் பெறுகின்ருர். அரிய கல்வியைப் பெற உரிய கிலே தெரிய கின்றது. மதி ஏக்கறுாஉம் மாசறு திருமுகத்து. (சிறுபாண், 157) கடைக்கண் ஏக்கற. (சீவகசிந்தாமணி, 1622) ஏக்கறவால் இன்னம் இரேனே. (இராமா, மாயாசன, 83) ஏக்கற்ற கூந்தற்பிடி (மிட்ைசியம்மை, 11) ஏக்கற்று இருந்த தாக்கணங்கு. (முத்துக் குமாரசுவாமி,45) இவற்றுள் ஏக்கறவு உ ணர்த்திகிற்கும் பொருளே அறிக.