பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2 I O7 கற்ற அளவு மனிதருக்கு அறிவு மிகவும் பெருகிவரும். ஊறும்=ஊர்ந்து மேலே கிளர்ந்து வரும். சிறந்த அறிவாளியாய் ஒருவன் உயர்ந்து திகழ வேண்டுமாயின் நல்ல நூல்களே நாளும் அவன் கருத் து.ான்றிக் கற்று வரவேண்டும். கல்வியும் அறிவும் கரும மும் தருமமுமாய் உரிமையுடன் மருவியுள்ளன. ஆற்று மணலுள் நீர் நிறைந்திருந்தாலும் அதனைத் தோண்டிய அளவுதான் நீர் நேரே சுரங்து வரும்; தோண் டுதல் இன்றேல் அது தோன்றலும் இன்ரும். மாங்தர் அகத்தே அறிவு மருவியிருந்தாலும் கற்ற அளவு தெளி வாய் அது ஒளி வீசி வருகிறது. கல்லாது ஒழியின் அது காணுமல் மறையும். மணலேத் தோண்ட நீர் சுரங்து வரும்; மனத்தைத் தோண்ட மதி தெளிந்து கதி விளைந்து வரும். அறிவை நீரோடு ஒப்ப வைத்தது, அதன் நீர்மை சீர்மைகளேக் கூர்மையா ஒர்ந்து உணர்ந்து கொள்ள. மணலேப் பறிக்கப் பறிக்க நீர் கிளர்ந்து வருதல் போல் நூல்களேப் படிக்கப் படிக்க மனிதர்க்கு அறிவு வளர்ந்து வருகிறது. ஒருவன் கல்லிய ஊற்று நீர் எல்லார்க்கும் இனிது பயன் படுகிறது. அதுபோல் ஒருவன் கற்ற கல்வியறிவு உலகுக்கெல்லாம் உவகை பூட்டியருளுகிறது. மணல் கேணி மனத்துக்கும், நீர் அறிவுக்கும், தோண்டல் கற்றலுக்கும், ஊறல் அறிவின் தேறலுக்கும் ஒப்பாம். அதுபோல என உருபு வெளிப்படாமல் வங் துள்ளமையால் இது எடுத்துக் காட்டும் உவமை யாம். அறிவு வெளியே இல்லே; உன் உள்ளத்திலேயே உள்ளது. முயன்று பயின்று உயர்ந்த பயனே அடைந்து கொள். உரிய முயற்சி அரிய உயர்ச்சியாம். படித்தல் பயிலல் கற்றல் என்னும் வினேக் குறிப்பு களால் கல்வியின் வடிவமும் வண்ணமும் வளமையும் :புமையும் தெளிவாக அறியலாகும்.