பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2 I 15 விட்ட குறையும் தொட்ட குறையும் விடாமல் ஒட்டி வருகின்றன. ஒரு பையன் இளமையிலேயே எளிதாக எதையும் கற்றுக் கொள்கிருன் என்ருல் அவன் முன்ன மே கல்வியோடு தொடர் புடையவன் என்பதையூகித்து உணர்ந்து கொள்கிருேம். மற்ற ஒரு சிறுவனுக்கு எத் தனே முறை சொல்லிக்கொடுத்தாலும் யாதும் நெஞ்சில் எருமல் மாட்டு மதியாய் மறுகி நிற்கிருன். அகர எழுத் தை அறிந்து கொள்ள ஆறுமாதம் ஆயது எனின் அவன் பலசன்மங்களில் யாதும் படியாமல் படுமுட்டாளாப் இருந்து வந்துள்ளமையை உலகம் அறிந்து கொள்ளச் செய்கிருன். உரிய கிலேயால் உண்மை தெரியவருகிறது. இளமையிலேயே வளமையாய்ப் படித்துக் கொள் வது நல்லது; அங்ங்னம் படியாமல் மடிமண்டி மறந்து இருந்து விட்டாயானல் சாகும் போதாவது கொஞ்சம் படித்துக் கொண்டு இறந்து போ என்பார் சாதலே ஈண்டு கோதலோடுஇணேத்துஆதரவுடன்உணர்த்திர்ை. ஆன்ம அமுதமாய் அமைந்துள்ள கல்வியின் மேன் மையை நன்கு தெளிந்தவர் ஆதலால் மக்கள் பருவத்தே படித்துக்கொள்ள வேண்டும் எனக் கருனேத்தாய்போல் நாயனர் உரிமையுடன் பலவகையிலும் நலமா உரைத்து வருகிரு.ர். உரைகள் விநய விவேகமாய் வருகின்றன. கற்றவர்களுக்கு உளவாகும் பெருமைகளேச் சுட்டிக் காட்டிக் கல்லாமையின் பொல்லாமையை விளக்கிக் கல் வியைப் போதித்திருப்பது யூகித்து உணருந்தோறும் உவகை சுரங்து உணர்வொளி மிகுந்து வருகின்றது. கல்வியை இழந்து விட்டால் மனிதன் மாடாயிழிந்து மறுகியுழலுகிருன். மடமையும் மூடமும் அவனேக் கடை யனுக்கி விடுகின்றன. அரிய பெருமைகளே அடைய வுரி பவன் சிறிய ஒரு மறதியால் சீரழிந்து ஒழிகிருன். சென்றஇடம் எல்லாம் சிறப்பருளும் கல்வியை நேர் ஒன்ற உணர்ந்துள் உயராமல்-நின்ற இருகால் எருதுபோல் ஈண்டு மனிதன் பெருகல் பெரிதும் பிழை.