பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 8 திருக்குறட் குமரேச வெண்பா பி ஸ் 2ள என்பவருக்குப் புதல்வராய்த் தோன்றிர்ை. தாய் பெயர் சிவகாம சுந்தரி. இவர் பிறந்து ஐந்து வயது வரையும் பாதும் பேசாமல் ஊமையாய் இருந்தார். பிள்&ள ஊமையாய் உள்ளதே! என்று பெற்ருேர் இரு வரும் உள்ளம் வருங்தினர். ஒருநாள் இவரை அழைத்துக் கொண்டு திருச்செந்துரை அடைந்து முருகக்கடவுள் திரு முன் உய்த்து ஊமைநீங்க அருள்புரியுமாறு உளம் உருகி வேண்டி விரதம் பூண்டிருந்தார். குமரன் அருளால் அது விரைவில் நீங்கியது; இக்குமரர் பேசும் திறமைபெற்ருர், பெற்ருேர் முதல் யாவரும் பெரு வியப்புற்ருர். பேச வாய் திறந்த உடனேயே எம்பெருமானது கருனேயைப் புகழ்ந்து பாடநேர்ந்தார். அன்பால் உருகிப்பாடிய அப் பாடல் கந்தர் கலிவெண்பா என்னும் பேரால் இது பொ ழுது வழங்கி வருகின்றது. செந்திற்பெருமான் திரு வருள்பெற்றுப் புலவர் பெருமானப் வெளிஏறிய இவர் பல தலங்களுக்கும் சென்ருர். மதுரையை அடைந்து மீனுட்சி அம்மை மீது பிள்ளேத்தமிழ் என்று ஒரு பிரபங் தம் பாடினர். அக்காலத்தில் அங்கு அரசு புரிந்திருந்த திருமலை நாயக்கர் இவரது மதி நலத்தையும் கவி கயத் தையும் கண்டு பெருமகிழ்ச்சிகொண்டு ஒரு முத்துமாலே யை இவர் கழுத்திலிட்டுச் சிவிகை முதலிய அரிய பல வரிசைகளும் செய்து ஆர்வத்தோடு ஆதரித்தருளிர்ை. அங்கிருந்து பெருஞ் சிறப்புடன் எழுந்து தருமபுரம், சிதம்பரம், வைத்திசுவரன்கோவில் முதலிய திருப்பதி க3ளத் தரிசித்து முடிவில் காசியை அடைந்தார். ஆண் டிருந்த மகமதிய மன்னனும் இவரது புலமை நிலையை அறிந்து பெருமதிப்புடன் பேணி பரிசில் பல தந்து ஒரு கிலப்பகுதியை என்றும் உரிமையாக உதவி இவரை உப சரித்து கின்ருன். அங்த இடத்தில் அழகிய ஒர் ஆலய மும் மடமும் அமைத்துத் தெய்வவழிபாடு செய்து சைவ சீலங்களுடன் இவர் தமிழ்ப் பிரசங்கங்கள் புரிந்திருங் தார். அந்த மடம் இன்றும் இவர்பெயரால் நன்கு நடந்து வருகின்றது. அயல் நாட்டு மன்னனும் முடிவணங்கி அடி பணிந்து தம்பால் அன்பு செய்தருளியதை கினேந்து உரு