பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2 I 13 "செக் கல்வித் தெய்வத்தை இவர் போற்றித் துதித்தார். 'மண் கண்ட வெண் குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என் பண்கண் டளவில் பணியச்செய் வாய்! படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பில் உன்போல் கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே! ’’ (சகலகலாவல்லிமாலே, 10) கல்வியால் இவர் அடைந்துள்ள அதிசய மாட்சிகளே இது காட்டியுள்ளது. நீதிநெறிவிளக்கம், மதுரைக்கலம் பகம், சிதம்பர மும்மணிக் கோவை, திருவாரூர் நான் மணிமாலை, காசிக்கலம்பகம், பண்டார மும்மணிக் கோவை முதலிய நூல்களே இவர் இயற்றியிருக்கிரு.ர். அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும் புறங்கடை நல்லிசையும் நாட்டும்-உறுங்கவல் ஒன்று: உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கில்லே சிற்றுயிர்க்கு உற்ற துனே. (நீதிநெறிவிளக்கம், 2) கல்வி எல்லா கலங்களேயும் அருளவல்லது; உயிர்க்கு இனிய உறுதித்துனே அதனினும் வேறு யாதும் இல்லே என இங்ங்னம் இவர் முடிவு கூறியுள்ளார். கல்வி யால் அரிய பல மகிமைகளே நேரே அனுபவித்தவராத லால் அதன் சீர்மையை ஆர்வத்தோடு பேசலானர்.தாம் பிறந்த நாட்டிலேயன்றி மறு புலங்களிலும் புகழும் பொ ருளும் பெற்று இப்புலவர்பெருங்தகை தலை சிறந்து விளங்கிர்ை. எங்த நாடும் எந்த ஊரும் கற்றவருக்குச் சொந்தமாம்; கல்வியைப் பெற்றவர் பேரின்பம் உற்ற வர் என்பதை உலகம் காண இவர் உணர்த்தி கின்ருர், கொற்ற முடிவேந்தர் கோல்கொண்ட தேசமன்றி மற்ற இடத்தில் மதிப்பில்லே-கற்றவரோ சென்ற இடம் எல்லாம் சிறந்து கதிர்மதிபோல் என்றும் திகழ்வர் இனிது. --