பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2132 திருக்குறட் குமரேச வெண்பா வழியில் மருவி வருகிற காமம் மதியைக் கெடுத்து வெறி யைவிளேத்து ஆன்மாவை அவலப்படுத்தி விடுகிறது. மனித வாழ்க்கையில் கல்வி செய்து வருகிற மாட்சி களேக் காட்சியாக் கண்டு வருகிருேம். கருதியுணர்கி ருேம். அறிவின் தெளிவு இருமையும் இன்பம் புரிகிறது. உணவை உண்டு உடலை வளர்ப்பதோடு ஒழிந்து போகாமல் உணர்வின் சுவைகளே நுகர்ந்து உயிரை வளர்க்க வேண்டும். அங்ங்னம் வளர்ப்பவரே பிறவிப் பயனைப் பெற்றவராகின்ருர். தாம் அனுபவித்து வரு கிற அனுபவங்களால் மனிதருடைய நிலைகள் மதிக்கப் படுகின்றன. பான்மை அளவே மேன்மைகள் விளை கின்றன. மதிநலம் மருவியது கதிநலமாகிறது. தேனுகரும் வண்டென்னத் தீங்கல்வித் தெள்ள முதை ஞானமுடை யார்பருகி நண்ணுவார் - ஊனமுறு பொல்லாப் பொறியின் புலேச்சுவையில் புக்கழுந்திக் கல்லார் கழிவர் களித்து. கல்வி யின்பம் தலைமையானது ஆதலால் அதனை விழைபவர் உயர்கிலேயாளராய் எ வ் வழி யும் ஒளி மிகுந்து யாண்டும் சிறந்து திகழ்கின்ருர். அறிவின் சுவையை நுகர்ந்து வருகிற மனிதன் அதிசய மேதையாய்ச் சிறந்து வருகிருன். புத்தி தத்து வத்தில் துய்த்து வருவது புனித யோகமாய்ப் பொலிங்து திகழ்கிறது. ஆன்ம போகம் மேன்மை யோகம். In the pursuit of intellectual pleasures lies every virtue; of sensual, every vice. (Goldsmith} அறிவின்பம் நுகர்வதில் தருமங்கள் பெருகி வரு கின்றன : பொறி நுகர்வில் பாவங்கள் படர்ந்துள்ளன என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணச வுரியது. புலன் நுகர்வு புலே நுகர்வாகிறது. ஊன வழிகளில் இழிந்து ஒழியாமல் ஞான ஒளியில் உயர்ந்து வருக. அவ்வரவே ஆருயிர்க்கு அதி ச ட: இன்பமாம். அந்த உண்மை இங்கு உணர வந்தது.