பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2180 திருக்குறட் குமரேச வெண்பா தக்க மதிப்பும் மிக்க மேன்மையும் கல்லாதவர்க்கு இல்லே. இந்த உண்மையை உணர்ந்து எல்லாரும் கற்று உயர வேண்டும். கல்வி மனிதனைத் தெய்வம் ஆக்கி மாண்புறுத்துகின்றது: கல்லாமை அவனே மிருகமாக்கி ஈனப்படுத்துகின்றது. ஈ ன ம் உருமல் எவவழியும் மானமா உயர்த்துவது ஞானமான நல்ல கல்வியே. கல்லாமையால் உளவாகும் இழிவுகளேப் பலவகை கிலேகளிலும் சுட்டிக்காட்டிக் கல்வியை நல்ல முறையில் ஒல்லேயில் கற்று உயருமாறு தேவர் உணர்த்தியுள்ளார். உண்மையை ஒர்ந்து ஊன்றி யுணர்ந்து நன்மை யுறுக. கல்லாப் புல்லர் சொல்லாடச் சோர்வு படுவர். இவ்வுண்மை சம்பந்தாண்டான் பால் அறிய வங்தது. ச ரி தம் சம்பந்தாண்டான் என்பவன் திருவண்ணுமலேயில் இருந்தவன். சமணம் புத்தம் சைவம் முதலிய மதவா தங்களேயே மிதம் மீறிப் பேசுபவன். எவரிடமும் வாது புரிவதையே வழக்கமாகக் கொண்டவன். சிறிது கற்ற வன் ஆயினும் பெருஞ் செருக்கு உற்றவன். தனது கல்வியறிவைப் பொல்லாத வழிகளில் செலுத்தி எல்லா ரையும் வாயடக்கி இறுமாந்து திரிந்தான். உள்ளே நல்ல ஒழுக்கம் இல்லாதிருந்தும் வெளியே ஆடம்பரமான ஆசாரங்கள் பூண்டிருந்தான். துறவி போல் தலையை முண்டிதம் செய்து விரதிபோல் விளங்கினனுயினும் விலைமகளிரிடமே தனது பொழுது முழுதும் போக்கி வங் தான். ஒருநாள் காளமேகப் புலவரைக் கண்டான். இடக்கும் குறும்புமே பேசும் இயல்பினன் ஆதலின் அவ ரிடமும் தனது செயலினே இவன் காட்டினன். புலவரே! மன்னு, மலுக்கு என்னும் இரண்டு மொழிகளே முதலிலும் முடிவிலும் அமைத்து ஒரு வெண்பாப் பாடும்' என்ருன். மயிர் வினேஞன் அதுபொழுது இவனுக்குச் சவரம் செய்துகொண்டிருந்தான் ஆதலால் அதனேயே நயமாக