பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2186. திருக்குறட் குமரேச வெண்பா கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன் சொல்லா தாரோடு அல்லோம் நாமே. (சம்பந்தர்) எல்லா இடத்தும் உளன் எங்கள் தம்இறை கல்லா தவர்கள் கலப்பறி யாரே. (திருமூலர்) கல்லாமையால் நேருகின்ற இழவுகளே இவை தெளி வாக் காட்டியுள்ளன. கற்றறிந்த ஞானிகள் தாம் கண்ட இன்ப கிலேயை மற்றவரும் பெற்று உய்யும்படி இவ் வாறு வழிகாட்டியிருக்கின்றனர். கல்வியே எவ்வழியும் தெளிவாய் ஒளி விசி இன்பம் அருளியுளது: கல்லாமை அல்லல் இருவாய் எங்கும் அவலமே புரிகின்றது. ஒன்றுக்கும் உதவாமல் பாழ்பட்டு இழிந்துள்ள களர் கிலத்தைக் கல்லாதவர்க்கு ஒப்புக் காட்டியிருப் பதில் துட்பக் காட்சி ஒன்றை உய்த்துணர்வாக வைத் திருக்கிருர் யூகித்து உணர்பவர் உண்மை தெரிந்து நன்மைகளே நன்கு ஒர்ந்து கொள்ளுகின்ருர், களர் நிலத் துப்பிறந்த உப்பினேச் சான் ருேச் விாேநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் கடைநிலத்தோர் ஆயினும் கற்றறிந் தோரைத் தலே நிலத்து வைக்கப் படும். (நாலடி 133) களர் யாதும் விளே யாத கழிநிலம்: அதிலிருந்து உப்புத்தான் தோன்றும் என்பதை இதல்ை அறிந்து கொள்கிருேம். விளே யாத ஒன்றில் விளேங்துள்ளதை விழைந்து கண்டு உள்ளம் உவந்து கிற்கின்ருேம். இழிந்த களரில் பிறந்த உப்பை உயர்ந்த வயலில் பிறந்த நெல்லினும் மேலாக மதித்து உலகம் விரும்பிக் கொள்கிறது. அது போல் தாழ்ந்த குலத்தில் பிறந்த வராயினும் அவர் கற்றவரானுல் உயர்ந்த குலத்தில் பிறந்தவரினும் சிறந்தவராக அவரை எவரும் போற்றிக் கொள்வர். ஒப்புரையுள் ஒர் உண்மையை உணர்கிருேம். கல்லாமல் கழித்து இழிந்த மூடனிடமிருந்து பிறந்த வனே எனினும் கற்றவன் ஆல்ை அங்த மகன் மேலானவ