பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. கல்லா ைம 罗20薰 நல்லார் வறுமை யுற்றிருக்கக் கல்லார் செல்வம் பெற்றுக் களிக்கின்ற அவல நிலைக்கு உரிய காரணத்தை ஒரு புலவர் இவ்வாறு கவலையோடு காட்டியிருக்கிரு.ர். புறவினேகளின் பலன்களே நினைந்து ஆறுதலுறும்படி தேறுதல் கூறி யிருப்பது யாரும் சிந்திக்க வுரியது. கல்வி யறிவுடையவரை கல்லார் என்று இதன் கண்ணும் குறித்திருக்கிருர். நன்மையும் நயமும் எவ் வழியும் செவ்விய கல்வி யாளரின் தன்மைகளே யாம். o உலக வாழ்வில் நல்ல சுக போகங்களே அனுபவித் தற்கு உதவியாயிருப்பது செல்வம்: அது நல்லவர்களி டம் சேர்ந்திருந்தால் எல்லார்க்கும் நலமாம்; அல்லாத வர்களிடம் கூடியிருப்பின் அவர்க்கும் அதற்கும் யாவர்க் கும் இன்னலும் இழிவும் இடர்களுமே விளையும். கண்கெட்ட குருடன் கையில் கதிர்மணி மேவியது போல் கலேப்பண்பு அற்ற முருடன் பால் திரு மருவி யிருப்பது பெரிதும் பரிதாபமேயாம். ஆகவே இன்ன தே! என்று எண்ணி வருந்தி இரங்கி இயம்ப நேர்ந்தது. கிலே மாறி வரவே புலே மீறி வந்தது. செல்வம் எய்தி யிருந்தாலும் கல்லாதவன் இழிந்து படுகிருன் யாதும் இல்லாதவன் ஆயினும் கற்றவன் "கொற்றவனிலும் சிறந்து யாண்டும் உயர்ந்து விளங்குகி முன் உயிரின் ஒளி எவ்வழியும் உயர்வை அருளுகிறது. கல்வியை இழந்து இழிந்து போகாதே; கற்று உயர்ந்து கொள்க என்று இங்ங்னம் உணர்த்தியுள்ளார். வறுமை யுறினும் கல்விமான் எவ்வழியும் இனிய ஒய்ப் பெருமை பெறுவன்: திரு எய்தினும் தெளிவில் லாதவன் செருக்கிச் சிறுமை யடைந்து இளிவுறுவன். கணிகண்ணனிடமும் காவலன் பாலும் இ ைவ கானவங்தன. இவர் சரிதம் சுவைமிக வுடையது. 276