பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ை n 2205 409. ஏத்துபுகழ் மனனானும் ஏற்றமுற்ருர் கற்ற ஒட்டக் கூத்தனர் என்னே குமரேசா-ஏத்துகின்ற மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீம்ப்பிறந்தும் கற்ருர் அனைத்திலர் பாடு. (து) இ-ள் குமரேசா : உயர்ந்த அரசரினும் ஒட்டக்கூத்தர் ஏன் சிறந்து விளங்கினர் ? எனின், மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்ருர் அனைத்து பாடு இலர் என்க. உம்மைகள் உயர்வும் இழிவும் உணர வந்தன. மேலான பிறப்பும் கல்லாமையால் கீழாம் என்கிறது. உயர்ந்த குலத்தில் பிறந்தவர் ஆயினும் கல்லாதவர் தாழ்ந்த மரபில் பிறந்தும் கற்றவர் போல் மேன்மை பெற். றிலர். மேலான தலைமையைக் கல்வியே அருளுகிறது. மதிப்பும் அவமதிப்பும் மதி நலத்தின் உயர்வு தாழ்வு களால் முறையே உதித்து வருகின்றன. கல்வியால் மதி யூகமும் அதல்ை அதிசய மகிமைகளும் உளவாகின்றன. பாடு = பெருமை: மேன்மை. இயல் செயல்களால் இசைபடிங்து உயர்ந்து ஒளி சிறந்து வருகிற மேலான மேன்மை பாடு என வந்தது. மேம்பாடு, மேதகவு என இது விளங்கிவரும். பாடு பெறவே மேலோர் பாடு படுகின்றனர். பாடு பெறுதியோ நெஞ்சே! (குறள் 1237) இதில் பாடு குறித்திருக்கும் பொருளேக் கூர்ந்து அறிக. கல்லாதான் பாடு இலன். (நான்மணி 96) பாடு சிறந்து. (ஐங்குறுநூறு 484). பாடு புலர்ந்த நறுஞ்சாந்து. (மதுரைக் காஞ்சி 226) பாடு ஒர்ந்து நிற்ப. (பெருங்கதை 1-37) பாடு அறியாதார் கண். (கலி 141) பாடுறு பெரும்புகழ்ப் பரதன். (இராமா, மீட்சி 332): பாடு இடம் பெருமை ஒசை. (நிகண்டு)