பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

、20G திருக்குறட் குமரேச வெண்பா இவற்றுள் பாடு உணர்த்தி நிற்பதை ஒர்ந்து கொள்க. உண்மையான பெருமை உணரவுற்றது. கல்வி எவரையும் வியத்தகு நிலையில் உயர்த்தி யருளும். அதனே இழந்தவன் எவ்வளவு உயர்ந்த குடி யில் பிறந்திருந்தாலும் இழிந்தே படுவான். உணர்வின் ஒளியை உற்றவரே உரிய உயர்வு பெற்றவ ராகின்ருர். மிக்க செல்வமும் மேலான குலமும் தம்மையுடை யாரை மேன்மையா உயர்த்த வல்லன எனினும் கல்வி இல்லையேல் அவை புல்லியன வாய்ப் புலர்ந்து படுகின் தறன. உள் ஒளி ஒருவிய அளவு வெளி வளங்கள் வினய் விளிகின்றன. ஒளியுடையன தாமாகவே விழுமிய மேன் மைகளே வியன அடைந்து கொள்ளுகின்றன. மேல், கீழ் என்பன மேலான சாதி கீழான சாதி என உலக வழக்கில் உலாவி வரும் வளமைகளே நோக்கி வங் தன. உடல் வழி வந்த உயர்வு, உயிர் கிலேயில் தோய்ந்து வந்த உயர்வின் எதிரே அயர்வுறுகின்றது. தோன்றிய குடிகிலேகள் ஊன்றிய படிகளாய் உரு வாகி யுள்ளன. இனிய நீர்மைகளால் பெரிய சீர்மைகள் வழிமுறையே பிறந்து வந்துள்ளன; அந்த உண்மைகளே ஒர்ந்துணர்பவர் வகுப்பு வகைமைகளேத் தகைமைகளாத் தெரிந்து நேரே தெளிந்து கொள்ளுகின்றனர். பெருமையும் சிறுமையும் கரும கிலேகளில் மரும. மாய் மருவி யுள்ளன. அறிவு செல்வம் அதிகாரம் ஈகை இரக்கம் நீதி முதலிய நெறிகளில் நேர்ந்து வந்துள்ளது. உயர்ந்த குலம் என ஓங்கி வந்தது. அவற்றில் தாழ்ங். தது இழிந்த குலம் என நேர்ந்தது. ஆதியில் தகுதி களைக் கொண்டு பகுதிகள் அமைந்தன; பின்பு பரம் பரை வழக்கமாய்ப் படிந்து பழமையூர்ந்து வரலாயின. மேன்மையுடையது மேல்; கீழ்மையுடையது கீழ். பண்புரிமைகளால் அவற்றின் பான்மைகளே உணர்ந்து கொள்ளலாம். உரிய தகுதி குன்றிய பொழுது உற்ற