பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ைம 22 15, இக்குறள் உருவாகி வந்துள்ளது. உண்மை கிலேகள் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வுரியன. விலங்கு என்றது ஆடு மாடு முதலிய மிருகங்களே. குறுக்கு நெடுக்கா வடிவம் வாய்ந்துள்ளமையால் விலங்கு என நேர்ந்தது. மனித இனத்தினும் மாறுபட்டு விலகியிருப்பதால் விலங்கு என வந்தது எனினும் அமை யும். மன உணர்வு குன்றியன மாக்கள் என கின்றன. மேலான குலத்தில் பிறந்திருந்தாலும் கல்வி இல் லாதவர் மிகவும் கீழானவரே என்று முன்னம் குறித்தார்: இதில், அவர் சிறந்த மனிதப் பிறவியை அடைந்திருக் தாலும் இழிந்த மிருகங்களே என இகழ்ந்துள்ளார். ஆருயிர்க்குப் பேரமிர்தமான அரிய கல்வியை உரிமையோடு பேணிக் கொள்ளாமல் மனிதன் வறிதே இழிந்து கழிந்து போவதை நினைந்து பரிந்து வருந்தி யுள்ளமையால் வார்த்தைகள் சூடேறி வந்துள்ளன. ஏனேயவர் என்றது கல்லாதவரை. மானுடராய்ப் பிறந்தும் மதிநலம் இழந்து ஈனம் அடைந்துள்ளமையால் இ வ் வா று இகழ்வாச்சுட்டி விட்டார். கல்வியறிவுடையதே நல்ல பிறப்பாகின்றது. விலங்கு மக்கள் என உவமானத்தில் கிறுத்திய திலைக்கு ஏற்பக் கல்லார் கற்ருர் என்று நிரலே சொல்ல வேண்டும்; அவ்வாறு கூருமல் மாறி வந்துள்ளமையால் இது, எதிர் நிரல் நிறை என்னும் இயல்விதியைத் தழுவி நின்றது. பொருள் தெளிவுற வழி வருகிறது. பெயரும் வினேயுமாம் சொல்லேயும் பொருளேயும் வேறு நிரல்நிறீஇ முறையினும் எதிரினும் நேரும் பொருள் கோள் நிரல்நிறை நெறியே. (நன்னூல் 414):