பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ைம 22 17 உருவத்தால் மனிதன் ஆயினும் கல்லாதவனே மிருகம் என்றே கருத வேண்டும் என்ற தல்ை அவனது பரிதாப நிலை அறியலாகும். அரிய அறிவு இழந்து படுதலால் கொடிய இழிவு புகுந்து கொண்டது, நாட்டுள் மனிதய்ை நண்ணினும் கல்லாதான் காட்டு விலங்கிற் கடைஎன்று-கேட்டும் படியா திருக்கின்ற பாழ்மகன் ஏனே மடியா திருக்கின்ருன் மண் . படியாதவன் படியில் இருப்பது பழியாம். அவன் கடிது மடிந்து போனல் கொடிய பழி அவனேக் கூடாமல் ஒழிந்துபோம். பின் பாவது அவன் தெளிந்து கொள்வான். உற்ற பிறவிக்கு உரிய பெருமையை ஒழித்துச் சிறுமையை விளேத்து நிற்றலால் அவன் கிலே குற்றம் என வந்தது. கல்லாமல் வாழ்தலினும் இல்லாமல் ஒழி தல் இனிது. கற்று வாழ்: இல்லையேல் இற்று ஒழி. மனிதப் பிறவி பெறுதற்கு அரியது; பெருமகிமை புடையது; சிறப்பு மிகுந்த இப்பிறப்பினைப் பெற்றும் கற்று உயர்ந்து உய்தி பெருமல் கல்லாமல் கழிந்து இழிந்து ஒழிவது பொல்லாத புலேப்பழியாய் கின்றது. செல்வ வளங்கள் எவ்வளவு செழித்திருந்தாலும் கல்வி ஒன்று இல்லே யானுல் அந்த மனிதன் எல்லா கலன்களும் இழந்து அல்லலுழந்து அழிகின்ருன். உரிய கல்வியை இழந்தவன் உயர்குல மகனுய்ப் பெரிய செல்வத்தை அடையினும் பெருமை ஒன் றிலேயே! அரிய கண் ஒளி இழந்தபின் அதுமுகத் துறினும் பிரியம் எய்துமோ? பிழையுறும்; பீழையே பெருகும். கண்ணுக்கு ஒளிபோல் மனிதனுக்குக் கல்வி: அ.து இல்லையாயின் இருளடைந்த குருடனய் அவன் மருளடைந்து மாள்கிருன். மருள் நீங்கி அருள் ஓங்கி வாழ்வதே தெருளான சிறந்த வாழ்வாம். 278